நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி பத்து பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட புக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கப்பன். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி செல்வி, மகன் மற்றும் மருமகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். செல்வி வீட்டின் வராண்டாவிலும் ரங்கப்பன் தனி அறையிலும் மகன் மற்றும் மருமகள் ஒரு அறையிலும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இரண்டு மர்ம நபர்கள் […]
