Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கையில் மண்ணெண்ணையோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பெண்”… பெரும் பரபரப்பு…!!!!!!

தற்போதைய காலகட்டங்களில் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை ஒரு சில அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பல்வேறு விதமான முடிவுகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் பெண் ஒருவர் 30 வருடங்களாக குடியிருந்து வரும் அவரது வீட்டிற்கு 2008 ஆம் வருடம் அரசின் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாகவும் அதனை வேறு ஒருவர் போலி ஆவணம்  தயாரித்து பட்டா பெற்றதாகவும் இது பற்றி அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிபிஎம் தலைவர்கள் – ஸ்ரீமதி பெற்றோர் சந்திப்பு ..!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கைதானவர்களுக்கு ஐகோர்ட் ஜாமின் வழங்கி நிலையில் மார்க்சிஸ்ட் தலைவர்களை மாணவி ஸ்ரீமதி தயார் சந்தித்தார். மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கதறி அழுதப்படியே மார்க்சிஸ்ட் தலைவரிடம் ஸ்ரீமதியின் தாயார் வேண்டுகோள்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மாமனாரை கல்லால் அடித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகன்”…. போலீசார் அதிரடி கைது…!!!!!

மாமனார் மீது கல்லால் அடித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகனை போலீசார் கைது செய்தார்கள். குடும்பத்தை வழி நடத்த பொறுமை முதல் தேவையாகும். குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் கருத்து சுதந்திரம் உள்ளவர்களாக வளர்க்கப்படும் குடும்பத்தினர் எந்த பிரச்சினையையும் எளிதாக கடந்து சென்றுவிடலாம். குடும்பத்தில் குற்றமோ, குறையோ எதுவாக இருந்தாலும் அதை பெரிது படுத்தாமல் இருந்து விட வேண்டும். அவ்வாறு அதை பெரிதுபடுத்தினால் சண்டையில் தான் முடியும். அவ்வாறு ஏற்படும் குடும்ப பிரச்சனையானது காவல் நிலையம் வரை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொலை அல்ல… பலாத்காரம் அல்ல… சரியான ஆதாரம் அல்ல… ஐகோர்ட் நீதிபதி கருத்து…!!

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ,  கொலையோ இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்த நிலையில் முதலில் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்த காவல்துறை, பின்னர் இந்திய தண்டனைச் சட்டத்தில் மைனர் பொண்ணை தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ சட்டம்,  தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தது. ஜாமீன்: இந்த வழக்கில் கைது […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாமக்கல் நீலகிரி பல்சுவை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர் வேலூர்

Heavy rain alert: 22 மாவட்ட மக்களே உஷார்….! உங்க பகுதிக்கும் அலெர்ட் சொல்லி இருக்காங்க…!!

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம்.  இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்,  நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன்….. ஸ்ரீமதி மரணம் கொலை அல்ல…. உயர்நீதிமன்றம்..!!

தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய ஸ்ரீமதி மரணத்தில் தற்போது பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ ஸ்ரீமதியினுடைய மரணத்திற்கு காரணம் அல்ல என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஸ்ரீமதியினுடைய மரணத்தில் பல்வேறு சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இந்நிலையில் தற்பொழுது ஸ்ரீமதியினுடைய மரணத்திற்கு பாலியல் பலாத்காரமோ கொலையோ காரணம் அல்ல என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஸ்ரீமதியினுடைய பெற்றோர் தொடர்ந்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டி வர கூடிய நிலையில் உயர்நீதிமன்றம் இதனை தெரிவித்து இருக்கிறது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டு கிரிக்கெட்

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு…. ஜாமீன் வழங்கப்பட்ட பள்ளி தாளாளர் உட்பட 5 பேருக்கு நிபந்தனைகள் என்ன?

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் மற்றும் இரண்டு ஆசிரியைகள் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.  கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே கனியாமூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தற்கொலை என பள்ளி தரப்பில் கூறப்பட்டாலும், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டு பெற்றோர் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் 4 நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்…! சீலிடப்பட்ட கவரில் 3அறிக்கை தாக்கல்… பார்த்த உடனே உத்தரவிட்ட நீதிபதி …!!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக அவர் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு  இன்றைய தினம் வந்த போது, தமிழக அரசின் சிபிசிஐடி தரப்பின் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞசர் முகமது ஜின்னா ஆஜராகி, மூன்று அறிக்கைகளை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 1.) பள்ளி கல்வித்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில்,  கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: கள்ளக்குறிச்சி மாணவி மரணம்; சிபிசிஐடி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு …!!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக அவர் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு இன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசினுடைய சிபிசிஐடி தரப்பின் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞசர்  முகமது ஜின்னா ஆஜராகி,  மூன்று அறிக்கைகளை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பள்ளி கல்வித்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில்,  கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவக் குழு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“இதனால் மலைவாழ் குழந்தைகளின் கல்வி பாலாகிறது”…… வெளியான பரபரப்பு தகவல்…..!!!

பழங்குடியினர் வாழ்விடம்தான் உயரத்தில் உள்ளதே தவிர, அவர்களின் வாழ்க்கைத் தரமோ அதலபாதாளத்தில் கிடக்கிறது. கல்விதான் சமூக மாற்றத்தின் திறவுகோல். பல சமூகங்கள் கல்வியின் உதவியால், உயரவும் செய்திருக்கின்றன. ஆனால், பழங்குடியினருக்குக் கல்வி இன்னமும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. மற்ற கிராமங்களைப் போல, மலைவாழ் மக்களுக்கு வாழ்விடத்தில் கல்வி பயிலும் வாய்ப்பு இல்லை. வனச் சட்டங்களால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். பிழைப்பு தேடி சமவெளிக்கு சென்று வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் செல்லும்போது தங்களது குழந்தைகளையும் அழைத்துச் சென்று […]

Categories
வானிலை

இடி, மின்னலுடன் கூடிய பலத்த கன மழை…. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…..!!!!

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆறுகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதோடு, தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளையும் வெள்ளநீர் சூழ்வதால் பொதுமக்கள் சற்று சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை, சேரப்பட்டு, மாவடிப்பட்டு, கொட்டப்புதூர், வெள்ளிமலை மற்றும் கரியாலூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இடியுடன் கூடிய […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கு….. பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமீன்..!!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உததரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே கனியாமூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தற்கொலை என பள்ளி தரப்பில் கூறப்பட்டாலும், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டு பெற்றோர் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் 4 நாட்களுக்கு பின் 17ஆம் தேதி வன்முறையாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய தொழிலாளி”…. கைது செய்த போலீசார்…!!!!

உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் சேந்தமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் சீனிவாசன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இவரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி அந்தோணி ராஜ் என்பவர் தனது மகனுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு கேட்டு இருக்கின்றார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் அந்தோணி ராஜ் ஆத்திரமடைந்து சீனிவாசனை ஆபாசமாக திட்டி தாக்கியதாக சொல்லப்படுகின்றது. பின் இதுகுறித்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மகளுக்காக மகனையே கடப்பாரையால் குத்தி கொலை செய்த தந்தை”…. கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம்….!!!!!

கள்ளக்குறிச்சியில் அண்ணன்-தங்கை இடையே ஏற்பட்ட தகராறில், தந்தையே மகனை கடப்பாரையால் குத்திக் கொலை செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எலியத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மயில் என்பவர் மீன்பிடி தொழிலை கேரளாவில் செய்து வருகின்றார். இவரின் முதல் மனைவி சந்திரா. இவர்களுக்கு சசிகுமார் என்ற மகன் இருக்கின்றார். சென்ற 25 வருடங்களுக்கு முன்பாக சந்திரா இறந்து விட்டதால் மயில் இரண்டாவதாக வசந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திவ்யா, தீபிகா உள்ளிட்ட இரண்டு மகள்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“உளுந்தூர்பேட்டை அருகே மின் மோட்டாரை திருடிய ஆசாமி”…. தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்….!!!!!!

உளுந்தூர்பேட்டை அருகே மின் மோட்டாரை திருடிய ஆசாமிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் அயன்வேலூர் கிராமத்தில் அண்மைக்காலமாகவே மின் மோட்டார்கள் திருடப்பட்டு வந்தது. இதனால் கிராம மக்கள் குழுவாகப் பிரிந்து இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் பரமசிவம் என்பவரின் வீட்டின் முன்பு இருந்த மின்னோட்டாரை அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் திருடிக் கொண்டிருக்கும் பொழுது பொதுமக்கள் அவரை கையும் களவுமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருமணமான நான்கே மாதத்தில்…. “கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்”….!!!!!!

கள்ளக்குறிச்சி அருகே திருமணமான நான்கு மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விளம்பார் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி(25) என்பவர் சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்த நித்யா(21) என்பவரை  சென்ற 4 மாதத்துக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது நித்யா இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு சென்ற ஒரு வாரத்திற்கு முன்பாக […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING; வெளியானது 2ஆவது பிரேதபரிசோதனை அறிக்கை …!!

கனியாமூர் மெட்ரிக் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் இரண்டாவது பிரத பரிசோதனை அறிக்கை விவரங்கள் வெளியாகி இருக்கிறது. கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மாணவியின் இரண்டாவது பிரத பரிசோதனை அறிக்கை ஆனது வெளியாகி இருக்கிறது. முதலில் செய்யப்பட்ட பிரத பரிசோதனை அறிக்கைக்கும், இரண்டாவதாக செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை சிறு வேறுபாடுகள் உள்ளதாகவும்,  தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்திய மாணவி மரண விவகாரத்தில் தற்போது புதிய […]

Categories
உலக செய்திகள்

சிவன் கோவிலில் காணாமல் போன சிலைகள்… 66 வருடங்களுக்கு பின்… அமெரிக்காவில் கண்டுபிடிப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலில் இருந்து காணாமல் போன உலோக சிலைகள், தற்போது அமெரிக்காவில் கண்டறியப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் வீரசோழபுரத்தில் அமைந்துள்ள மாரீஸ்வரன் என்னும் சிவன் கோயிலில் இருந்த ஆறு உலோக சிலைகள் கடந்த 1956 ஆம் வருடத்தில் காணாமல் போனது. அதனையடுத்து, காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க நாட்டில் இருக்கும் ஒரு அருங்காட்சியகத்தில் அந்த உலோக சிலைகள் பிரித்து வெவ்வேறான இடங்களில் வைக்கப்பட்டிருந்தது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கனியாமூர் கலவர வழக்கு”…. மேலும் ஐந்து பேர் கைது…!!!!!

கனியாமூர் கலவர வழக்கில் போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியவர் உள்பட மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகின்றார்கள். இந்நிலையில் வீடியோ ஆதாரத்தின் மூலம் பள்ளியில் நடந்த கலவரத்தின் போது வாட்ஸ் அப் குழுவில் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு காரணமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சரக்கு கிடைக்குமா பாஸ்?…. எனக்கும் ஆசை தான் ஆனா…. இணையத்தில் வைரலாகும் திருமண பத்திரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் நடக்கும் திருமணங்கள் எல்லாம் வித்தியாசமான முறையில் தான் நடைபெறுகிறது. அதிலும் ஒரு சில திருமணங்களில் திருமணத்திற்கு முன்னதாகவே மணமக்கள் ஒருவருக்கொருவர் சில நிபந்தனைகளை விதித்து கொண்டு கையெழுத்திடுகிறார்கள். இதற்கு ஒரு படி மேலே சென்று விதவிதமான பத்திரிகைகளையும் அச்சிட தொடங்கிவிட்டனர். அவ்வகையில்,கள்ளக்குறிச்சி வக்கனந்தல் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவரின் திருமண பத்திரிக்கை தான் தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில், எனக்கு கல்யாணம், கண்டிப்பா வரணும். கறி சோறு போடணும்னு ஆசைதான், […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்….. கலெக்டருக்கு அதிரடி உத்தரவு….!!!

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூலை 17-ம் தேதி பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து, போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு பள்ளியை சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டதுடன் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், பள்ளியை சீரமைக்க அரசு உத்தரவிடக் கோரி, பள்ளியை நிர்வகிக்கும் லதா, கல்விச் சங்கம் சார்பில் அதன் பொருளாளர் முருகேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளியை சீரமைக்க அனுமதி வேண்டும்…. 10 நாளில் ஆட்சியர் முடிவு எடுக்க ஐகோர்ட் உத்தரவு..!!

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகம் பள்ளியை சீரமைக்க அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கில் 10 நாளில் பரிசீலித்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் முடிவு எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த +2 மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளியில் மர்மமாக உயிரிழந்து கிடந்தார்.. இதையடுத்து இதற்கு நீதிகேட்டு 4 நாட்களாக நடைபெற்ற போராட்டம் 17ஆம் தேதி வன்முறையாக மாறியது.  இந்த வன்முறையில் பள்ளி முழுவதும் சேதப்படுத்தப்பட்டு பேருந்துகள், பள்ளியின் ஆவணங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்…. பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர் பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கரடிசித்தூர் பகுதியில் கூலித்தொழிலாளியான ஆரோக்கிய ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரோக்கியம்மாள்(30) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஆரோக்கிய ராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் பின்புறம் வழியாக வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஆரோக்கியம்மாளின் கழுத்தில் கிடந்த 6 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மர்மமான மரணம்” சாலையோரம் கிடந்த பெண்ணின் சடலம்…. போலீஸ் விசாரணை…!!

மர்மமான முறையில் பெண் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டு-தெத்துகாடு மெயின் ரோட்டின் ஒரம் பெண் ஒருவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அந்த பெண் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கல்வராயன்மலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு”…..!!!!!!

கல்வராயன் மலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் 171 மலை கிராமங்களில் 75 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த மலைக்கு செல்லும் பாதை மிகவும் வளைவாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது. இதை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு உத்தரவின் பேரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு கூட்டம் வெள்ளிமலை மும்மூனை சந்திப்பு பகுதியில் நடந்தது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“சங்கராபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு”…. தலைமை ஆசிரியருக்கு அறிவுரை….!!!!!

சங்கராபுரம் அருகே இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே இருக்கும் கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மாணவ-மாணவிகளின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின் மதிய உணவு தரமானதாகவும் சுவையாகவும் வழங்கப்படுகின்றதா என்பது குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். இதையடுத்து மாணவ-மாணவிகளுக்கு தரமான, சத்தான உணவுகளை வழங்கிட தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து பள்ளி வகுப்பறைகளை ஆய்வு செய்து பயன்பாட்டில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்”…. சாராயம் விற்பனை செய்த 9 பேர் கைது….!!!!!!

சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சாராயம் விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபொழுது தியாகராஜபுரம் ஏரிக்கரை அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மீனாட்சி, மொட்டையம்மாள், முத்தம்மாள், ஏழுமலை உள்ளிட்ட ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 41 லிட்டர் சாராயப்பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தார்கள். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

லாரி டியூப்களில் இதுவா இருக்கு?…. 4 வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் சாராயம் தயாரித்து மலையடிவார கிராமத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்கு காவல்துறையினர் பல முயற்சி மேற்கொண்டனர். எனினும் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க முடியாமல் காவல்துறையினர் திணறுகிறார்கள். ஆகவே கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சப்படுவதும், அதை அங்கிருந்து கடத்தி கிராமங்களில் விற்பனை செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் காவல்துறையினர் மலையடிவாரத்திலுள்ள தகரை கிராமத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போதைப்பொருளுக்கு எதிராக மோட்டார்சைக்கிள் விழிப்புணர்வு பேரணி…. வெளியான புகைப்படம்….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு பற்றிய மோட்டார்சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கலெக்டர் ஷ்ரவன்குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இவற்றில் காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை போன்ற துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் மோட்டார்சைக்கிளில் போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட இந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவியிடம் நம்பர் கேட்ட பேராசிரியர் நண்பர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள கிராமத்தில் 19 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் 2 ஆம் வருடம் இளங்கலை கணிதம் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மாணவி தன் ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். இந்நிலையில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கல்லூரி மாணவியிடம் செல்போன் நம்பர் கேட்டு அச்சுறுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மாணவி தன் கணவருக்கு செல்போன் வாயிலாக தகவல் தெரிவித்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளிக்கு ஆதரவா ? அவரு யாருனே தெரியாது.. நைசாக நழுவிய AIADMK …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  கள்ளகுறிச்சி நிகழ்வுகளில் எடப்பாடி கருத்து சொல்லி இருக்கின்றார், நான் கருத்து சொல்லி இருக்கின்றேன். போலீஸ் விசாரணையில் இருக்கிறது, அதனால் நாங்கள் ஏற்கனவே சிபிஐ விசாரணை வேண்டுமென்று தான் கேட்டோம், சிபிஐ விசாரணை வைத்து அந்த தாயினுடைய நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். ஒரு தாய் அவர்களுக்கு இந்த அரசாங்கத்தின் மீது திருப்தி இல்ல, காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. அவர்களே என்ன செய்கிறார்கள் ?நாங்கள் கேட்கின்ற கேள்விக்கு பதில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது… கைவரிசை காட்டிய 3 வாலிபர்கள்…. அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!!!

சின்னசேலம் அருகே கணியம்பூர் சக்தி மேல்நிலைப்பள்ளி கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற கலவரம் பற்றி டிஜிபி பிரவீன் குமார் அபினவ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு  பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த கலவரம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் கைதாகி  இருக்கின்றனர். மேலும் வீடியோ மற்றும் புகைப்படங்களில் ஆதாரத்தை கொண்டு தொடர்புடைய நபர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த சூழலில் கணியாமூர் கலவரத்தின் போது பள்ளி வளாகத்தில் உள்ள மாட்டுப் பண்ணை காவலாளியை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

முதல்வரின் மானாவாரி மேம்பாட்டு திட்ட பயிற்சி முகாம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!

மூங்கில் துறை பட்டு  அருகே உள்ள வடகீரனூர் கிராமத்தில் அம்மா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு முதல்வரின் மானாவரி  மேம்பாட்டு திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் இதயத்துல்லா தலைமை தாங்கியுள்ளார். அந்த மாவட்டம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் மதிசுதா முன்னிலை வகித்துள்ளார். இந்த நிலையில் முகாமில் முதலமைச்சரின் மாநாடு மேம்பாட்டு திட்டம் பற்றி விரிவான பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் சொட்டுநீர் பாசனத்தின் பயன்பாடுகள், மண் மாதிரி சேகரிப்பின் அவசியம், இயற்கை விவசாயம், ஊடுபயிர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள்…… அதிகாரிகள் அதிரடி…….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட சங்கராபுரம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி விளம்பர பதாகைகளை வைக்கப்பட்டு இருந்தது இவற்றை அகற்றும் பணி செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கடைவீதி, மும்முனை சந்திப்பு, கள்ளக்குறிச்சி சாலை உள்ளிட்ட பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் பேனர்கள் பலகைகளை பேரூராட்சி ஊழல்கள் அப்புறப்படுத்தினர். மேலும் இளநிலை உதவியாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தார்கள் .

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“இது யாருடையது”….. மோட்டார் சைக்கிளை திருடி வந்த வாலிபர்…. போலீசார் தீவிர விசாரணை…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில் துறைப்பட்டு அருகில் உள்ள மணலூர் பகுதியில் வடபொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அந்த நேரத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவரை போலீசின் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள மேல்பாச்சர் பகுதியை சேர்ந்த ஏழுமலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்கும் நபர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் பானையங்கால் கிராமத்திலிருந்து சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு போகும் வழியில் மணிமுக்தா ஏரி இருக்கிறது. இந்த ஏரியில் ஒரு கும்பல் கொக்கிபோட்டு மின்சாரத்தை பாய்ச்சி மீன் பிடித்து வந்தனர். இது தொடர்பாக அறிந்ததும் விழுப்புரம் மீன்வள மேற்பார்வையாளர் சுதாகர் நேற்று மணிமுக்தா ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்தால் உயிர்சேதம் ஏற்படும். ஆகவே அவ்வாறு மீன்பிடிக்கக் கூடாது. அதையும் மீறி மின்சாரம் பாய்ச்சி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கண்டறியப்பட்ட பழமையான சோழர் கால கல்வெட்டு…. பின் ஆய்வாளர்கள் செய்த செயல்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் வடதொரசலூர் ஏரிக்கரை அருகேயுள்ள பிடாரிஅம்மன் கோயில் வளாகத்தில் 800 வருடங்களுக்கு முந்தைய சோழர்கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. இதை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், காப்பாட்சியர் ரஷீத்கான், நூலகர் அன்பழகன், பண்ரூட்டி இமானுவேல், ஆசிரியர் உமாதேவி போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த கல்வெட்டு 5அடி நீளமும், 3.5 அடி அகலமும் கொண்டதாகும். அத்துடன் அந்த கல்லின் இரு புறமும் எழுத்துக்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடப்பாவிகளா!…. ஆடி தள்ளிப்படியில் இதுவா விற்பனை பண்றீங்க?…. அதிர்ச்சியில் சமூக ஆர்வலர்கள்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கல்வராயன் மலை மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக இருக்கிறது. இதனை பயன்படுத்தி சமூவிரோதிகள் பலர் கல்வராயன்மலை மற்றும் அடிவாரப் பகுதியில் சாராயம் காய்ச்சி பல இடங்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சாராயம் விற்பனை செய்ய கிராமபுறங்களில் ஏலமும் நடந்து வருகிறது. இதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் சமூக விரோதிகள் காவல்துறையினருக்கு சவால்விடும் வகையில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சங்கராபுரம் அருகில் அ.பாண்டலம் […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் ரவிக்குமார் உட்பட 5 பேரின் சிறைகாவல் ஆகஸ்ட் 26 வரை நீட்டிப்பு..!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உட்பட 5 பேரின் சிறைகாவல் ஆகஸ்ட் 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காணொளி மூலம் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், 5 பேரின் காவலை நீட்டித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு…. பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் மனு ஒத்திவைப்பு..!!

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே கனியாமூர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த 13ஆம் தேதி 17 வயது மாணவி மர்மமாக இறந்து கிடந்தார்.. இது தற்கொலையல்ல, கொலை தான் என்று பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து நீதிகேட்டு பள்ளியில் 4 நாட்கள் அமைதியாக நடந்த போராட்டம் 17ஆம் தேதி வன்முறையாக மாறியது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பள்ளி செயலாளர் சாந்தி, தாளாளர் ரவிக்குமார், […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யாததால் விசாரணையை ஒத்தி வைத்தது விழுப்புரம் மகளிர் நீதிமன்றம்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஒரு 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை….. என்ன நடந்தது?….. பரபரப்பு சம்பவம்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கோவிந்தசாமிபுரத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். அந்த மாணவியின் வீட்டின் அருகே அலமேலு என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு உறவினரான விஜய் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கும் மாணவிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த விஷயம் விஜய்யின் அத்தை அலமேலுக்கு தெரிய வர தனது கணவர் மற்றும் மகனுடன் மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை…. பெரும் சோக சம்பவம்…!!!!

கள்ளக்குறிச்சியில் மேலும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியும் பக்கத்து வீட்டை சேர்ந்த விஜய் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்த விஜயின் அத்தை அந்த மாணவியை கண்டித்துள்ளார். அதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து மகளிர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து விசாரித்த போது மாணவி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வாகன விபத்து: தி.மு.க. பிரமுகர் உட்பட 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்…..!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் அழகுநாதன்(42). தி.மு.க. பிரமுகரான இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் சேந்தமங்கலத்திலிருந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியே உளுந்தூர்பேட்டைக்கு வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் சேர்ந்தநாடு குறுக்கு சாலை பகுதியில் வந்தபோது பின்னால் வந்த லாரி அழகுநாதன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உரிமம் இன்றி இல்லங்கள், விடுதிகளை நடத்துவோருக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இருப்பதாவது “தனியார் இல்லங்கள் மற்றும் விடுதிகளின் தரத்தை உறுதிப்படுத்தும் அடிப்படையில் முறையாக உரிமம்பெறாமல் இயங்கிவரும் விடுதிகள், இல்லங்கள் உடனே உரிமம் பெறுவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் விடுதியின் உரிமம்பெற தீயணைப்பு மற்றும் சுகாதார சான்றிதழ், கட்டிட உறுதித்தன்மை சான்று, பார்ம் டி உரிமம் போன்றவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் விடுதி நடத்தப்படவேண்டும். அதுமட்டுமல்லாமல் சிறார்களுக்கு 40 சதுரஅடி […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்….. வீடியோக்களை வெளியிட வேண்டாம்…. சிபிசிஐடி வேண்டுகோள்…!!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம் என சிபிசிஐடி வேண்டுகோள் விடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாலை மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம் என்று சிபிசிஐடி வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 17 வயது பள்ளி மாணவி இறந்தது தொடர்பான வழக்கு குற்றப்பிரிவு ,குற்ற புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது. விழுப்புரம் குற்ற புலனாய்வு துறையினர் மேற்படி வழக்கும் விசாரணை மேற்கொண்டு மேற்படி இறப்பு தொடர்பான அனைத்து கோணங்களிலும் விசாரணை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கருக்கலைப்புக்கு சென்ற பெண் திடீர் உயிரிழப்பு…. தனியார் மருத்துவமனை பூட்டி சீல் வைத்து அதிகாரிகள்….!!!!

கருக்கலைப்பு செய்வதற்கு சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாடு கிராமத்தில் அம்மாசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியநாயகி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2  ஆண் மற்றும் 1  பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பெரிய நாயகி மீண்டும் 2 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதனால் பெரியநாயகி கருக்கலைப்பு செய்வதற்காக சேலம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வைத்து திடீரென பெரியநாயகி உயிரிழந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏரியில் உயர்ந்த நீர் மட்டம்…. மீன் பிடிப்பதற்காக தண்ணீரை வீணாக வெளியேற்றிய குத்தகைதாரர்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

ஏரியில் மீன் பிடிப்பதற்காக தண்ணீரை வீணாக வெளியேற்றிய குத்தகைதாரருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பிரதிவிமங்கலம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. அந்த ஏரியில் மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் மூலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2 மாதங்களாக குத்தகைக்கு எடுத்தவர் மீன் பிடித்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தியாகதுருகம் பகுதியில் பெய்த மழை காரணமாக பிரதிவிமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வந்துள்ளது. இதனால் ஏரியில் நீர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரம்: விடுதியில் மாணவியை தூக்கி செல்லும் சி.சி.டி.வி காட்சி வெளியீடு…. பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி படித்துவந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் சென்ற மாதம் 13-ம் தேதி இறந்தார். கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த இம்மாணவியின் பெற்றோர் சாவுக்கு நீதிக் கேட்டு போராட்டத்தில் இறங்கினர். கடந்த 17- ஆம் தேதியன்று மாணவர் அமைப்பினர் மற்றும் பல அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரத்தில் முடிந்தது. தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தை தொடர்ந்து பள்ளி தாளாளர் ரவிக் குமார், செயலாளர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவி ஸ்ரீமதி வழக்கு…. கைதான 173 பேர்…. “மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு”….!!!!!

மாணவி ஸ்ரீமதி வழக்கில் கைதான 173 பேரின் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது. இதனால் பள்ளி சூறையாடப்பட்து. இந்த வழக்கு சிபிசிஐடி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் வசம் உள்ளது. பள்ளியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக 322 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் மாணவி இறப்பு வழக்கில் பள்ளி நிர்வாகிகள் 5 பேர் […]

Categories

Tech |