Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அக்காவுடன் குழந்தை எரிப்பு…. தங்கையின் வெறிச்செயல்…. அதிர்ச்சி தரும் காரணம்…!!

சண்டை காரணமாக தன் அக்காவை தங்கையே தீயிட்டு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் களத்தூர் கிராமத்தில் வசிக்கும் சின்னசாமி என்பவருக்கு சுமதி மற்றும் சுஜாதா என்று 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இந்நிலையில் சுஜாதா பிரசவத்துக்காக தன் தாய் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து மூத்த மகள் சுமதியும் தனது ஒரு வயது குழந்தையுடன் தன் தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சின்னசாமி மற்றும் அவரின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“தற்கொலை பண்ணிக்கலாம் வா” பெண்ணிற்கு விஷம்…. கள்ளக்காதலன் கைது…!!

சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறி கள்ளக்காதலிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வேல்முருகன்-லதா தம்பதியினர். வேல்முருகனின் இரண்டாவது மனைவியான லதா ஏழுமலை என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் லதாவிற்கு ஏழுமலைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவ்வப்போது தனிமையில் சந்தித்து பழகி வந்தனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

வானிலை எச்சரிக்கை…! ”தமிழகத்தில் மிக கனமழை” 15 மாவட்டத்திற்கு அலார்ட் …!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி உள்ளதாகவும் பெண்கள் சாலையில் நடமாட முடியவில்லை எனவும் புகார் எழுந்தது. இதையடுத்து டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து டாஸ்மாக் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உங்க மனைவியை எங்கே ? கோர்ட்டுக்கு வர சொல்லுங்க… எம் .எல்.ஏவுக்கு செக் வைத்த ஐகோர்ட் …!!

எம் .எல்.ஏ பிரபுவின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக உலகில் கொரோனா  பிரச்சனை நிகழ்ந்து வரும் நிலையில் ஊரடங்கு  அண்மையில் நடந்த கள்ளக்குறிச்சி தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த பிரபு என்பவர். இவர் கல்லூரி மாணவியை சவுந்தர்யா என்பவரை கடந்த மாதம்  ஐந்தாம் தேதி அன்று திருமணம்   செய்து   கொண்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இவருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தியாக துருகத்தை  சேர்ந்த  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மனைவி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு…!!!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணையும் அவரது தந்தையையும் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்து வரும் பிரபு கடந்த சில நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் அப்பா பிரபு தன் பெண்ணை கடத்தி திருமணம் செய்துகொண்டதாக ஆட்கொணர்வு மனு ஒன்றை அளித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் என் மகளை கடத்திச் சென்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“MLA காதல் திருமணம்” துரோகம் பண்ணிட்ட… பெண்ணின் தந்தை செய்த செயல்…!!….

காதல் திருமணம் செய்த எம்எல்ஏவின் வீட்டின் முன்பு பெண்ணின் தந்தை தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தனி தொகுதி அதிமுக வின் சட்டமன்ற உறுப்பினர் பிரபு தியாகதுருகத்தில் சேர்ந்த சௌந்தர்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனது மகளை அதிமுக எம்எல்ஏ பிரபு கடத்தி விட்டதாக சௌந்தர்யாவின் தந்தை புகார் கொடுத்தார். இதனிடையே இன்று அதிகாலை பிரபு சௌந்தர்யாவை திருமணம் செய்துள்ளார். இது […]

Categories
Uncategorized

“பாலியல் தொல்லை” இனி மரண தண்டனை தான்…. எச்சரித்த காவல்துறை….!!

18 வயதுக்குட்பட்ட  பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தால் மரண தண்டனை நிச்சயம்  துணைசூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்த திருக்கோவிலூர் பஸ் நிலையத்தின் அருகே உள்ள காவல் நிலையத்தின் முன்பு நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சியில், 18 வயதுக்குட்பட்ட பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கான ஏற்படும் பாலியல்  தொடர்பான பிரச்சனைகளுக்கு  நீதிமன்றம் வழங்கியிருக்கும் மரண தண்டனை பற்றிய  எச்சரிக்கையை பொதுமக்களில்  குற்றம் சிந்தனை உடையவர்களுக்கு தெரிவிக்கும் பிரச்சார நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற திருக்கோவிலூர் துணை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிணவறையில் அதிர்ச்சி… சிக்கிய மருத்துவமனை நிர்வாகம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை எலி கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்துள்ளார். அந்த கட்டுமான பணியில் ஆவியூரை சேர்ந்த முருகன் மற்றும் ஆறுமுகம் என்ற இருவரும் பல மாதங்களாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு  வீட்டின் சுவற்றில் சாரம் கட்டி சிமெண்ட் பூசுவதற்கான வேலையை செய்து கொண்டிருந்தனர். அப்போது கயிறை சாரத்தில் கட்டுவதற்கு முயற்சித்தபோது வீட்டு கட்டிடத்தின் அருகே சென்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பிணவறையில் சடலம்” கடித்து குதறிய எலிகள்…. கொந்தளித்த உறவினர்கள்…..!!

அரசு மருத்துவமனையில் பிணவறையில் இருந்த உடல்களை எலிகள் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவில் அருகே ஆவியூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆறுமுகம். 40 வயதான இவர் கொத்தனார் வேலை செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்கோவிலூர் கிழக்கு வீதியில் உள்ள ஒரு கட்டிட மாடியில் அமைந்த சாரத்தை சக ஊழியர்களுடன் அகற்றிக் கொண்டிருந்த போது  முருகன் என்பவர் சாரத்தில் இருந்த கம்பு ஒன்றை எடுக்கும்போது அந்த வழியாக சென்ற மின்கம்பியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மின்னல் தாக்கி… பற்றி எரிந்த ஆட்டுக் கொட்டகை… 65 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திடீரென மின்னல் தாக்கியதால் ஆட்டுக் கொட்டகை பற்றி எரிந்து 65 ஆடுகள் உடல் கருகி உயிரிழந்தன. கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செல்லூர் என்ற கிராமத்தில் சின்னையன் என்ற விவசாயி வசித்து வருகிறார். ஏராளமான ஆடுகளை வளர்த்து கொண்டிருக்கும் அவர், நாள் முழுவதும் பகல் நேரத்தில் ஆடுகளை வயல் வெளியில் வைத்துவிட்டு மாலை நேரமானதும் கொட்டகையில் அடைத்து விடுவார். அவ்வாறு நேற்று ஆடுகளை மேய்த்துவிட்டு மாலையில் கொட்டகையில் அடைத்து வைத்தார். நேற்று அப்பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

புதிய கலெக்டர் அலுவலகம்…. ஆரம்பப் பணிகள் தொடக்கம்… கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு…!!

புதிய கலெக்டர் அலுவலகத்தை கட்டும் பணிகளை பொதுத் துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை முதலமைச்சர் கடந்த 26 .11. 2019 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.இதைஅடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் தற்காலிகமாக அங்கு இருக்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வளாகத்தின் ஒரு பகுதியில் இயங்கி வருகின்றது.இந்நிலையில் கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள வீர சோழபுரத்தில் 40.18 ஏக்கர் பரப்பளவில் புதிய […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இட்லி சாப்பிட மறுத்த 5வயது குழந்தை…. அடித்து கொலை செய்த கொடூர பெரியம்மா …!!

கள்ளக்குறிச்சி அருகே குழந்தை இட்லி சாப்பிட மறுத்ததால் ஆத்திரத்தில் பெரியம்மாவே குழந்தையை அடித்து கொலை செய்தது கேட்போரை பதைபதைக்க வைக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேல்வெளி கிராமத்தை சேர்ந்தவர் ரோசாரியோ – ஜெயராணி தம்பதி. இவர்களுக்கு ரென்சி மேரி என்ற 5 வயது குழந்தை இருந்தது. குழந்தையின் தாய் ஜெயராணி இறந்து விட குழந்தை ரென்சி மேரியை ஜெயராணியின் தாய் பச்சையம்மாள் வளர்த்து வந்தாள். அதே வீட்டில் தான் இறந்த ஜெயராமின் அக்கா ஆரோக்கிய […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குழந்தை என்னைப் போல இல்லை… “சண்டை போட்டுவிட்டு”… கிளம்பிய கணவனை காணவில்லை… விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி..!!

கணவனை மனைவியே தனது காதலனை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த தம்பதியினர் பாலமுருகன் மணிமேகலை. இந்த  தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் ஆத்தூரில் வசித்து வரும் நிலையில் பாலமுருகன் பெங்களூரில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அவ்வப்போது விடுமுறைக்கு ஆத்தூர் வந்து குடும்பத்தினரை பார்த்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் எட்டு மாதங்களுக்கு முன்பு மணிமேகலை தனது இரண்டாவது பெண் குழந்தையை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மசூதிக்கு மந்திரிக்க வந்த போது… “திருமணத்தை மீறிய உறவு”… கழுத்தறுத்து ஏரியில் வீசிய கணவன்… அதிரவைத்த சம்பவம்..!!

குழந்தைக்கு மந்திரிப்பதற்காக வந்த பெண்ணுடன், திருமணத்தை மீறிய உறவு ஏற்பட,  இறுதியில் அது கொலையில் முடிந்திருக்கிறது..  இந்த அதிர்ச்சி சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது.. உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் திருநாவலூர் பெரியபட்டு ஏரியில் கடந்த 14-ஆம் தேதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தபகுதி மக்கள் உடனடியாக இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சுற்றுலா… ஆழம் பார்க்க சென்ற இளைஞர்… ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சோகம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலையில் இருக்கின்ற ஆற்றில் ஆழம் பார்க்கச் சென்ற நபர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் ரெட்டியார் பாளையம் என்ற பகுதியில் நடராஜன் என்பவரின் மகன் கௌதம் (41) என்பவர் வசித்து வருகிறார். அவர் தனது நண்பர்கள் ராஜேஷ்குமார், வினோத், பாலாஜி, பாரத், ராகுல், கணேஷ், ஏழுமலை ஆகிய 7 நபர்களுடன் இரண்டு கார்கள் மூலமாக, நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே இருக்கின்ற […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆற்றில் மூழ்கிய டாக்டரின் மகன்… காப்பாற்ற போன மாணவி… 2 உயிர் பறிபோன சோகம்..!!

ஆற்றில் மூழ்கி டாக்டருடைய மகன் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராயப்பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பத்மசரண்(வயது 12). கச்சிராயப்பாளையத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் சசிகுமார் அவரது மகனை பொட்டியம் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் தங்க வைத்துள்ளார். அங்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாக்லேட் வாங்கி தருவதாக கூறி… சிறுமியிடம் பாலியல் சீண்டல்… இளைஞரை போக்ஸோவில் கைது செய்த போலீஸ்..!!

சங்கராபுரம் அருகே 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள ஊராங்கன்னி எனும் பகுதியைச் சேர்ந்த மாயவன் என்பவரின் மகன் சதீஷ் குமார்.. இவனுக்கு வயது 21.. இவன் தனது வீட்டின்அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை சாக்லேட் வாங்கிக் தருவதாகக் கூறி அருகில் இருந்த உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக சொல்லப்படுகிறது.. பின்னர் அந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காருக்குள் விளையாடிய குழந்தைகள்… ‘லாக்’ ஆன கதவு… மூச்சு திணறி உயிரிழந்த பரிதாபம்..!!

காரில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கதவு லாக் ஆனதால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டம் குலதீபமங்கலம் பகுதியை சேர்ந்த குழந்தைகள் வனிதா மற்றும் ராஜ் இருவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயினர். வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் குழந்தைகள் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் தவித்தனர். இந்நிலையில் வீட்டின் அருகே இருந்த காரை பார்த்தபொழுது காரின் உள்ளே குழந்தை மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் கார் […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு – அறிவிப்பு …!!

கொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை தற்போது அதன் பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையை இதற்கு காரணம் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தன. குறிப்பாக சென்னையில் முழுவதுமாக முழு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நோய்தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சென்னையைப் போல பல அம்சங்களில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரூ5,000-ரூ10,000 நிவாரண உதவி….. தகுதி இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் தகவல்…!!

அரசு வழங்கும் நிவாரண உதவியை பெறுவதற்கு கிராமிய கலைஞர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் கிராமிய கலைஞர்கள் அரசு வழங்கும் நிதி உதவியை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் கிரன் குராலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “தொன்மை வாய்ந்த கிராமியக் கலைகளை போற்றும் விதமாகவும் மேலும் அதனை வளர்க்கும் விதமாகவும் கிராமிய கலைஞர்களையும்  கலை குழுக்களையும் ஊக்குவிக்க அவர்கள் ஆடை, இசைக்கருவிகள் மற்றும் அணிகலன்களை வாங்க […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சியில் இன்று 23 கர்ப்பிணி பெண்கள் உட்பட மொத்தம் 71 பேருக்கு கொரோனா உறுதி! 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மூன்று பேருக்கு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த 23 கர்ப்பிணி பெண்கள் மற்றும் கோயம்பேடு தொடர்பில் உள்ளவர்கள் என மொத்தம் 71 பேருக்கு நோய்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து சென்னையில் இதுவரை 76 பேர் கொரோனா […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எரிசாராயம் காய்ச்சிய 6 பேர் கைது… “440 லிட்டர் பறிமுதல்”… காவல்துறை அதிரடி!

கள்ளக்குறிச்சியில் சாராயம் காய்ச்சிய 6 பேரை போலீசார் கைது செய்து 440 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர் நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கையாக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் அதிகமாக காய்ச்சப்பட்டு உள்ளது. இந்நிலையில் இதனை தடுக்கும் நோக்கத்துடன் மதுவிலக்கு காவல்துறையினர் ரேவதி […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கலங்கிய 7 மாவட்டங்கள்….! ஆரஞ்சு மண்டலமாக மாறியது …..!!

கொரோனா பாதித்த 7 மாவட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு ஆரஞ்சு பகுதிக்கு மாறியுள்ளது. இன்றைக்கு 121 நபர்களுக்கு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. 1937ஆக நேற்று வரை இருந்த எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். செங்கல்பட்டில் 12 நபர்களுக்கும், நாமக்கல்லில் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

170 கிலோமீட்டர்.. 2நாள் உண்ண உணவின்றி.. நடந்தே வந்த சிறுவன்..!!

170 கிலோமீட்டர் 2 நாட்கள் காலில் செருப்பின்றி, உண்ண உணவின்றி நடந்தே வந்த சிறுவனை கண்டு போலீசாரின் மனம் வருத்தமடைந்தது. கோவையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்காக 170 கிலோமீட்டர் தொலைவிற்கு காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்து வந்த சிறுவன் உள்ளிட்டவர்களை சேலம் காவல் துறையினர் மீட்டு உணவு வழங்கி வாகனத்தில் அனுப்பி வைத்தனர். கட்டுமான பணிக்காக கோவை சென்று அங்கேயே தங்கி வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தினர் ஊரடங்கால் வேலை […]

Categories
கள்ளக்குறிச்சி கோயம்புத்தூர் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

170 கி.மீ தூரம் செருப்பில்லாமல் நடந்தே வந்த சிறுவன்! காவலர்கள் செய்த பெருஉதவி!

கோவையில் இருந்து கள்ளக்குறிச்சி  செல்வதற்கு 7 வயது சிறுவன் உட்பட 16 பேர் 170 கிமீ நடந்தே வந்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த  32 வயதான அய்யாசாமி என்பவருக்கு,  28 வயதுடைய செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியரின் 7 வயதான சபரிநாதன் என்ற மகன் 2 ஆம் வகுப்பு படிக்கிறான். இந்த நிலையில் கோவையில் கட்டுமான தொழில் செய்ய அய்யாசாமி குடும்பத்துடன் சென்றார்.. இதனிடையே கடந்த 24 ஆம் தேதி முதல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சமூக இடைவெளியை பின்பற்றாத மக்கள்… இழுத்து மூடப்பட்ட கடைகள்!

உளுந்தூர்பேட்டையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் 10க்கும் மேற்பட்ட கடைகள் இழுத்து மூடப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு 144 தடை உத்தரவை ஏப்ரல் 21 ஆம் தேதி வரை அமல்படுத்தியுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைக்கு வெளியே பொருட்கள் வாங்க வெளியே வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் மக்கள் சமூக விலகலை பின்பற்றாமல் கடைகளில் பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.. அந்த வகையில்,  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஊரடங்கு உத்தரவால் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து.. திருநங்கைகள் வருத்தம்..!!

திருநங்கைகள் அதிக அளவில் திரண்டு நடத்தும் ஒரே விழாவான  கூவாகம் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் என்ற இடத்தில் இருப்பது பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில். ஆண்டுதோறும் சித்திரை மாதம் இங்கு நடைபெறும் திருவிழாவில் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் திருவிழா தொடர்பாக கூவாகம் மற்றும் அதை சுற்றியுள்ள 8 கிராம பூசாரிகள் […]

Categories

Tech |