Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 12 லட்ச ரூபாய்… ஜோராக நடைபெற்ற விற்பனை… அதிகம் வாங்கி சென்ற வியாபாரிகள்…!!

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 12 லட்சம் ரூபாய்க்கு தானியங்கள் விற்பனை செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் சாலையில் அமைந்திருக்கும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளம் 15 முட்டைகள், உளுந்து  7 முட்டைகள், எள் 600 மூட்டைகள் , பச்சபயிர், கேழ்வரகு, மணிலா 10 முட்டைகள், வரகு உள்ளிட்ட 633 தானிய மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் 100 கிலோ எடை கொண்டுள்ள மக்காச்சோளம் ஒரு மூட்டை அதிக விலையாக 1633 ரூபாய்க்கும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அவர்களுக்கும் டெஸ்ட் பண்ணியாச்சு… வெளியான பரிசோதனை முடிவு… கள்ளகுறிச்சி மாவட்டத்தின் நிலவரம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 14,110 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13, 952 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 12,955 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்கமால் 118 பேர் பரிதமாக உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவரின் உறவினர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்தற்கான முடிவு வெளியாகியுள்ளது. அந்தப் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதுக்காகத்தான் கொண்டு போறீங்களா… மொத்தம் 200 கிலோ வெல்லம்… வசமாக சிக்கிய 4 பேர்…!!

சாராயம் காய்ச்சுவதற்காக பொருட்களை கொண்டு சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் மேம்பாலம் அருகில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்த போது அதில் 15 கிலோ கடுக்காய் மற்றும் 200 கிலோ வெல்லம் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது அந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் அடித்து பிடித்து ஓடியவர்கள்… சுற்றி வளைத்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

ஆட்டோவில் மது பாட்டில்களை கடத்த முயற்சி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகில் மாலையம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் சில மர்ம நபர்கள் ஆட்டோவில் மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு இருப்பதாக அம்மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரை மர்மநபர்கள் பார்த்ததும் ஆட்டோவில் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? பெண் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திடீரென பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பைத்தந்துறை கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பச்சையம்மாள் தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் இருந்த பச்சையம்மாளை அருகில் உள்ளர்வர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கபட்ட சிகிச்சை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த கார்… கோர விபத்தில் பறிபோன உயிர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே புதூர் சாய்பாபா நகர் பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு பிரவீன்குமார் என்ற மகன் உள்ளார். இவர் வேலை காரணமாக காரில் சென்னைக்கு சென்றுள்ளார். அந்த காரை அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீகுமார் என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் செம்பியன்மாதேவி பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடிரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த காரானது சாலையோர […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சொல்றத கேட்க மாட்டீங்களா… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… பின்பற்றப்படும் தீவிர கட்டுப்பாடுகள்…!!

கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து பூட்டி சீல் வைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வரும் காரணத்தால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் கொரோனா தொற்றின் புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்களா என்று ஆய்வு செய்வதோடு, அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்து பூட்டி சீல் வைத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இந்த ஐடியா நல்லா இருக்கே…. காவல்துறையினரின் புது முயற்சி… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…!!

திறந்தவெளியில் காவல்நிலையம் அமைத்து மக்களின் குறைகளை கேட்பதோடு காவல்துறையினர் அவர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.  உலகெங்கிலும் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை முன்னெச்சரிக்கையாக செயல்படுத்தி வருகிறது. இதனை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் காவல் நிலையத்தின் காவல்துறை அதிகாரிகள் திறந்தவெளி பகுதியில் தற்காலிகமாக வளாகம் அமைத்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து காவல்துறையினரிடம் மனு கொடுக்க […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அதனாலதான் இப்படி ஆகிடுச்சு… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்கம்பி அறுந்து கீழே விழுந்த விபத்தில் மின்வாரிய தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நயினார்பாளையம் பகுதியில் சோழன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒப்பந்த தொழிலாளியாக நயினார்பாளையம் மின் வாரியத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பொத்தாசமுத்திரம் பகுதியில் புதியதாக மின் கம்பம் நடும் பணியானது நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை அடுத்து மின் கம்பத்தில் ஏறி சோழன் மின்கம்பியை இழுத்துக் கட்ட முயற்சி செய்த போது திடீரென மின் கம்பம் முறிந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சிறுமியை காப்பாற்ற சென்றதால்…. அடுத்தடுத்து நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்…!!

தண்ணீரில் மூழ்கி இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிக்காடு கிராமத்தில் ராஜா என்பவர் கல் உடைக்கும் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இதனை அடுத்து ராஜாவின் மகள் ஷாலினி தனது உறவினரான மேகலா, செல்வி ஆகியோருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் ஷாலினி ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாரா விதமாக தண்ணீரில் மூழ்கிவிட்டார்.  இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மேகலாவும், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… கலெக்டரின் அதிரடி ஆய்வு… சீல் வைக்கப்பட்ட கடைகள்…!!

ஊரடங்கின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு கலெக்டர் சீல் வைத்ததோடு அபராதம் விதித்துள்ளார்.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் கலெக்டர் கிரண்குராலா ஆய்வு செய்தார். அப்போது ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி வியாபாரிகள் வியாபாரத்திற்காக மதியம் 12 மணிக்குப் பிறகும் கடைகளின் ஷட்டரை பாதி திறந்து வைத்து விற்பனை செய்ததை கலெக்டர் கண்டுபிடித்துள்ளார். இதனை அடுத்து அந்த கடைகளுக்கு கலெக்டர் கிரண்குராலா பூட்டி சீல் வைத்தார். மேலும் அப்பகுதியில் விதியை மீறி திறந்து வைத்திருந்த டீ கடைகள் உட்பட […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சீசன் முடிவடையும் நிலையில்… விற்பனைக்காக குவிந்த மூட்டைகள்… மேலாண்மை இயக்குனர் வெளியிட்ட தகவல்…!!!

சீசன் முடிவடையும் நிலையில் பருத்தி முட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளதாக கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வைத்து வாரம் ஒருமுறை பருத்தி சந்தை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த சந்தைக்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் உள்ள 80 விவசாயிகள் 268 பருத்தி மூட்டைகளை மொத்த விற்பனைக்காக கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு கொண்டு வந்தனர். இதனை அடுத்து சத்தியமங்கலம். அன்னூர். திருப்பூர், மகுடஞ்சாவடி, […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் தொற்று… உயரும் பலி எண்ணிக்கை… பின்பற்றப்படும் கட்டுப்பாடு நடவடிக்கை…!!

கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.  உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவிவரும் காரணத்தால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் அதிக அளவில் கொரோனா பரவிவருவதால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அங்கு 12,898 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12,197 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஆனால் 114 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அதுக்காக தான் இப்படி பண்ணுறோம்… சுற்றித்திரியும் வனவிலங்குகள்… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

வனவிலங்குகள் தண்ணீர் தேடி காட்டுப்பகுதியில் இருந்து கிராமப்புரத்திற்குள் நுழைவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அங்கு மான்கள், காட்டெருமைகள், குரங்குகள் ஆகிய வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் அந்த வனப்பகுதியில் உள்ள சிமெண்ட் தொட்டிகள், நீர்நிலைகள் அனைத்தும் கடும் வெயிலின் காரணமாக வறண்டுபோய் காணப்படுகின்றது. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்தில் உள்ளன. இந்நிலையில் காட்டை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அதெல்லாம் இறக்குமதி பண்ணியாச்சு… மொத்தம் 27 லட்ச ரூபாய் விற்பனை… குறைக்கப்பட்ட விலை…!!

தமிழக அரசின் விற்பனை கூடத்தில் தானியங்கள் 27 லச்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் பகுதியில் தமிழக அரசின் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்ப்பட்டுக் கொண்டிருக்கிறது . இந்த விற்பனை கூடத்தில் தானியங்களின் இறக்குமதியானது மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில்  700நெல் மூட்டைகள், மணிலா 3 முட்டைகள், 100 உளுந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். மேலும் 200 மூட்டைகளில் எள் வந்ததுள்ளன. இந்நிலையில் அதிகபட்சமான விலை ரூபாய் 8156 மற்றும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இது எங்களுக்கும் சொந்தம்… அண்ணனின் மூர்க்கத்தனமான செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவத்தில் ஏற்பட்ட தகராறில் அண்ணன் தம்பியை தாக்கி மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணாச்சலம் என்ற மகன் உள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அருணாச்சலம் தன்னுடைய வயலுக்கு மின் மோட்டார் மூலமாக தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த போது அவரின் அண்ணனான முருகேசன் என்பவரும், அண்ணி ஜோதி என்பவரும் சென்றுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் வயலில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இவன் மேல தான் சந்தேகமா இருக்கு… வசமாக சிக்கிய ஆட்டோ டிரைவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மது பாட்டிகளை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவரடியார் குப்பம் பகுதியில் மணலூர்பேட்டை காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை காவல்துறையினர்  சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது சட்ட விரோதமாக ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தி சென்றது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் ஆட்டோ டிரைவரை கைது செய்ததோடு, அவர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாடு மேய்ந்தது ஒரு குத்தமா…. வாலிபர்களின் வெறித்தனமாக தாக்குதல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முன்விரோதம் காரணமாக இரண்டு வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் கிராமத்தில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவிச்சந்திரன் என்ற ஒரு மகன் உள்ளார். மேலும் அதே பகுதியில் வசிக்கும் நாராயணன் என்பவருக்கு சாமிதுரை  என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சாமிதுரைக்கும் ரவிச்சந்திரனுக்கும் இடையே சில மாதங்களாக நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து ஒரு நாள்  ரவிச்சந்திரன் நிலத்தில் சாமிதுரையின் மாடு மேய்ந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“இதை சொன்னா திட்டுவாங்க” கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

தேர்வில் தோல்வி அடைந்தால் பெற்றோரிடம் சொல்ல தைரியம் இல்லாத கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மொரால்பாளையம் என்ற கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதி ஆண்டு படித்து வந்துள்ளர். இந்நிலையில் ராஜேஸ்வரி திடீர்ரென தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் இருந்த ராஜேஸ்வரியை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உறவினர்களுடன் பெண் கேட்டு சென்று… ரகளை செய்த வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

வாலிபர் ஒருவர் தனது பகுதியில் வசிப்பவரின் வீட்டிற்கு பெண் கேட்டு சென்று தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மஞ்சபுத்தூர் கிராமத்தில் பிச்சப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அதே பகுதியில் வசிக்கும் முனுசாமி என்பவரின் மகளை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனால் முனுசாமி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாலையின் நடுவே சாராயம்… கோபத்தில் கொந்தளித்த இளைஞர்கள்… சமாதானப்படுத்திய காவல்துறையினர்…!!

சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவேடிக்கை எடுக்குமாறு இளைஞர்கள் சாலை மறியல் போராட்டதில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டதில் உள்ள பொரசக்குறிச்சி கிராமத்தில் டியூப்பில் வைத்து சாராயம்  விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அங்குள்ள இளைஞர்கள் விரைந்து சென்று சாராயத்தை கைப்பற்றியுள்ளனர். இதனை அடுத்து கள்ளக்குறிச்சி அடரி சாலையின் நடுவே ஒரு பெரிய பேரலில் அந்த சாராயத்தை ஊற்றி இளைஞர்கள் முக கவசம் அணிந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே… அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… வலை வீசித் தேடும் போலீசார்…!!

அரசு ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் நகை பணம்  மற்றும் செல்போன்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டதில் உள்ள  பிரகாஷ் நகர் பகுதியில் காசிமணி என்பவர் வசித்து வருக்கிறார். இவர் ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இந்நிலையில் இரவு காசிமணி  தனது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டு  இருந்த போது அவரின் வீட்டின் பின்புற கதவை உடைத்து மர்ம  நபர்கள் உள்ளே  நுழைந்துவிட்டனர். இதனை அடுத்து மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த  […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நான் தான் கொலை பண்ணுனேன்…. தாய் கொடுத்த வாக்குமூலத்தால்…. அதிர்ச்சி அடைந்த மகள்…!!

கள்ளக்குறிச்சியில் குடித்துவிட்டு வந்த கணவனை, மனைவியே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த தம்பதிகள் மருதமுத்து – சித்ரா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மருதமுத்துவுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் மருதமுத்து குடித்து விட்டு வீட்டிற்கு வந்து சித்ராவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த சித்ரா அருகில் இருந்த சுத்தியலை எடுத்து மருதமுத்துவின் தலையில் ஓங்கி அடித்து விட்டு அவரது உறவினர் […]

Categories
மாநில செய்திகள்

Shocking: ஆவின் பால் பாக்கெட்டுக்குள்…. செத்து கிடந்த தவளை…. மக்கள் அதிர்ச்சி…!!

மக்களுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக பாலும் இருக்கிறது. இந்த பாலின் மூலம் தேவையான சில சத்துக்கள் கிடைக்கிறது. தினமும் காலையில் பால் பாக்கெட்டுகளை வாங்கி டீ, காபி போன்றவற்றை செய்து குடித்து வருகின்றனர். சிலர் பால் பாக்கெட்டுகளை வாங்கி தங்களுடைய குழந்தைகளுக்கும் கொடுத்து வருகிறார்கள். சில பால் குடிக்கும் குழந்தைகள் இந்த பால் பாக்கெட்டுகளை தான் நம்பி இருக்கின்றது. இவ்வாறு கடைகளில் வாங்கும் பால் பாக்கெட்டுகளை விட நேரடியாக மாடுகளிலிருந்து கறக்கப்படும் பால் சத்து நிறைந்ததாகவும், தூய்மையானதாகவும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

” கணவனுடன் சண்டை”… 2 குழந்தைகளை கொன்ற கொடூர தாய்… கள்ளக்குறிச்சியில் அரங்கேறிய சம்பவம்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சம்சுநிஷா என்ற பெண் கணவருடன் சண்டை போட்டு பிரிந்து தனது குழந்தைகளை கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சோழம்பட்டை  சேர்ந்தவர் சம்சுநிஷா. இவருக்கு காஜாமைதீன் என்பவருடன் திருமணம் ஆகி 14 வயதில் ஒரு மகள், 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார், சில ஆண்டுகளுக்கு முன்பு காஜாமைதீன்  காலமானார். அதன்பிறகு சம்சுநிஷா கள்ளக்குறிச்சியை  சேர்ந்த ஷெரீப்பை திருமணம் செய்தார். அவர் பெங்களூரில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கணவன் இறந்த துக்கம்” தாய் & மகள் கிணற்றில் விழுந்து தற்கொலை…. சோக சம்பவம்…!!

கணவன் இறந்த சோகத்தில் தாய் மற்றும் மகள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் திவ்யஸ்ரீ. இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் அவருடைய கணவர் திடீரென உயிரிழந்துள்ளார். கணவன் இறந்ததால் திவ்யஸ்ரீ கடுமையான மாணவருத்தத்தில் இருந்துள்ளார். இதையடுத்து திவ்யஸ்ரீ தனது மகளுடன் சென்னை தாம்பரத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தந்து அத்தை மற்றும் நாத்தனார் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அரசுப் பள்ளி ஆசிரியரை காலில் விழ வைத்த கொடூரம்… அதிர்ச்சி…!!!

கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியரை காலில் விழவைத்து மன்னிப்பு கேட்கச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாமியார் செய்த தொழில்…. கேவலமா இருக்கு…. மருமகள் எடுத்த முடிவு….!!

கள்ள மது விற்பனை செய்த மாமியாரால் அவமானம் அடைந்ததாக கருதி மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கமலாம்பாள். இவர் கடந்த  20 ஆண்டுகளாக தனது வீட்டில் மறைத்து வைத்து மது விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமலாம்பாளின் மகன் பாலமுருகனுக்கும் சகுந்தலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கமலாம்பாள் வீட்டில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வந்தது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அக்கா,தம்பியுடன் கிணற்றுக்கு குளிக்க சென்ற சிறுமி… திடீரென்று தண்ணீரில் மூழ்கியதால்… நேர்ந்த சோகம்….!!

கிணற்றுக்கு குளிக்க சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் விவசாயியாக உள்ளார். இவருக்கு 15 வயதில் நாவுக்கரசி என்ற மகள் உள்ளார். நாவுக்கரசி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நாவுக்கரசியும் அவரது சகோதரி கவியரசி மற்றும் சகோதரர் தேவா ஆகிய மூவரும் அப்பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையில் வாங்காத பொங்கல் பரிசுத் தொகுப்பு… வாங்கியதாக வந்த குறுஞ்செய்தி… பொதுமக்கள் சாலை மறியல்…!!

நியாய விலைக்கடையில் வாங்காத பொங்கல் தொகுப்பு வாங்கியதாக குறுஞ்செய்தி வந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதோடு 2500 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள  நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொராசக்குறிச்சி  கிராமப்பகுதியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்…. விபத்தில் பலி…. அதிகாலையில் சோகம்…!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அதிகாலையில் விபத்தில் சிக்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே விருத்தாசலம் செல்லும் சாலையில் கார் ஒன்று அதிகாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அங்கு இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த பிரியா(43) அவருடைய மகன் அபிஷேக்(16) ஆகிய இருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதையடுத்து பிரியாவின் கணவர் சௌந்தர்ராஜன் மற்றும் மகள் ஈஸ்வந்தினி(18) ஆகிய இருவரும் படுகாயமடைந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மகள்… கல்லூரியில் சேர்க்க காரில் சென்ற குடும்பத்தினருக்கு… நேர்ந்த துயரம்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற மரம் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சவுந்தர்ராஜன்(45)- பிரியா(43). இத்தம்பதியருக்கு அபிஷேக்(16) என்ற மகனும் எஸ்வந்தினி(18) என்ற மகளும் உள்ளனர்.எஸ்வந்தினி தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் அவரை  நாமக்கல்லில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்காக குடுபத்தினர் அனைவரும் நாமக்கல் நோக்கி காரில் சென்றுள்ளனர். அப்போது   […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இரும்பு சத்து மாத்திரையை உட்கொண்ட 1 1/2 வயது குழந்தை… தீவிர சிகிச்சை மூலம் உயிர்பிழைப்பு…!!

விளையாடும் போது அதிக அளவு மாத்திரையை உட்கொண்ட குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்  குமரேசன்- கனிமொழி.இத்தம்பதியருக்கு  ஒன்றரை வயதில் பவ்யா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது குழந்தையை வீட்டில் விளையாட வைத்துவிட்டு கனிமொழி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை வீட்டில் இருந்த இரும்பு சத்து மாத்திரையை எடுத்து அதிக அளவில் சாப்பிட்டுள்ளது. இதனால் குழந்தை சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தது. இதை  பார்த்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே கவனம்! ஆபத்தான பொருட்களை…. குழந்தைகளுக்கு எட்டாமல் வையுங்கள்….!!

தாய் ஒருவர் சமையல் செய்துகொண்டிருந்த போது குழந்தை சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் தம்பதிகள் குமரேசன் – கனிமொழி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பவ்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கனிமொழி தன்னுடைய குழந்தையை விளையாட வைத்துவிட்டு சமையல் அறையில் சமையல் செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கிருந்த மாத்திரைகளை எடுத்து குழந்தை அதிக அளவில் சாப்பிட்டுள்ளது. ஆனால் கனிமொழி கவனிக்காமல் சமையல் வேலையில் மும்முரமாக இருந்துள்ளார். இதையடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள்… கத்தி முனையில்… நகை மற்றும் பணம் பறிப்பு…!!

அதிகாலையில் வியாபாரி வீட்டில் கத்தி முனையில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தை  சேர்ந்த தம்பதியினர் ஜோதிமணி-சாந்தா. இத்தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.ஜோதிமணி  பழைய மோட்டார் சைக்கிள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென மர்ம நபர்கள் 5 பேர் கொண்ட கும்பல் ஜோதிமணியின் வீட்டுக்கதவை தட்டி உள்ளனர் . அந்த சத்தம் கேட்டு வீட்டின் வராண்டாவில் தூங்கிக்கொண்டிருந்த சாந்தாவின் தந்தை நந்தகோபால் எழுந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆட்டுப்பண்ணைக்குள் புகுந்த ஏரி நீர்… 600 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்… கண்கலங்கும் உரிமையாளர்கள்…!!

சங்கராபுரம் அருகே வெள்ளத்தில் சிக்கி 600 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாவளம்  கிராமத்தை சேர்ந்தவர்கள் கருத்தபிள்ளை, பழனி, அஞ்சலை. இவர்கள் மூவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஏரிகரை  ஓடை அருகே பட்டி அமைத்து அதில் 600க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை அடைத்து வளர்த்து வந்தனர். தற்போது சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அந்தப் பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“இரும்பு கதவை” திறந்த போது… பாய்ந்த மின்சாரம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு நேர்ந்த கொடுமை…!!

மின்சாரம் தாக்கி ஒரே  குடும்பத்தை சேர்ந்த  இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்  விக்னேஷ் நேற்று காலை அவரது மாமனார் வீட்டிற்கு அருகிலுள்ள கொட்டகைக்கு சென்றுள்ளார். அப்போது கொட்டகையின் நுழைவு பகுதியிலிருந்த பழைய இரும்பு கதவை  தொட்ட போது எதிர்பாராதவிதமாக விக்னேஷின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே ஜாக்கிரதை… விளையாட சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…!!!

கள்ளக்குறிச்சியில் பழனிசாமி என்பவர்  5 ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சின்ன சேலத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் 5ம் வகுப்பு படித்து வரும் சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள்.அப்போது அதே பகுதியில் வசித்து வரும் பழனிசாமி (வயது 38) என்பவர் அச்சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அவளது தாய் கூலி வேலைக்கு சென்றுள்ளார். அவர் வீட்டுக்கு வந்தவுடன் நடந்ததை கூறியுள்ளார். மகள் சொன்னதைக் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தந்தையுடன் பேசிக்கொண்டிருந்தபோது… திடீரென கேட்ட சத்தம்… தந்தை கண் முன்னே மகனுக்கு நேர்ந்த சோகம்..!!

அதிவேகமாக வந்த கார் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவருக்கு  பிரகதீஸ்வரன் என்ற மகன் உள்ளான். பிரகதீஸ்வரன் அப்பகுதியிலுள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் சம்பவத்தன்று பிரகதீஸ்வரன் தனது தந்தையுடன் அம்மையகரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று பேசி கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார் பிரகதீஸ்வரன்  மீது மோதி விட்டு நிற்காமல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த” 2 குழந்தைகள்”… குளிக்கும்போது ஏற்பட்ட விபரீத சம்பவம்..!!

குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே பாலி  கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். இவருக்கு 9 வயதில்  சமீரா என்ற பெண் குழந்தையும்  7 வயதில் யோகேஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. நேற்று சமீராவும் யோகேஷும் அப்பகுதியில் உள்ள சிவன் கோயில் குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது குளத்தில் குளித்துக் கொண்டிருந்த குழந்தைகள்  இருவரும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். குளத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீண்ட நாட்களாக வரதட்சணை கொடுமை… மனமுடைந்த பெண்… கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு…!!

வரதட்சணை கொடுமையால் தற்கொலை முயற்சி செய்த பெண்ணின் கணவர் உட்பட 4 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே காங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சசிகலா. இத்தம்பதியினருக்கு  4 வயதில் சூர்யா என்ற  பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சசிகலாவை  அவரது கணவர் கணேசன் , மாமனார் சாமிநாதன் , மாமியார் கல்யாணி  மற்றும் கணேசனின் உறவினர் உஷா ஆகிய 4 பேரும் சேர்ந்து வரதட்சணை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காலராவுக்கு ஒருவர் பலி…. 40 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி…. தமிழகத்தில் அதிர்ச்சி…!!

காலராவுக்கு தமிழகத்தில் ஒரு நபர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மலை கிராமத்தில் வசிப்பவர் கண்ணன்(60). இவருக்கு திடீரென்று வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. எனவே அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு காலரா  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்குள்ள 40க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சியில் சோகம்… கணவனை இழந்த பெண் திடீரென… பரிதவிக்கும் 2 குழந்தைகள்…!!

கள்ளக்குறிச்சியில் கணவனை இழந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் செல்வம்- கண்மணி. இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதியினருக்கு  11 வயதில் விஷ்ணு என்ற மகனும் 9 வயதில் சிவனேசன் என்ற மகனும் உள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு செல்வம்  இறந்துவிட்டார். இதையடுத்து கண்மணி திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தில் பெட்டிக்கடை ஒன்று  நடத்தி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மீள முடியாத துயரம்”… தாயும் மகளும் ஒரே சேலையில்… கள்ளக்குறிச்சி அருகே நேர்ந்த சோகம்..!!

கள்ளக்குறிச்சி அருகே தாய்-மகள் தற்கொலை  கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பாலமுருகன்-லலிதா. லலிதா அழகுக் கலை நிபுணராக பணியாற்றி வந்தார் . இவர்களது  மகள் 18 வயதுடைய  தர்ஷினி .இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில்  படித்து வந்தார்.  பாலமுருகன்  கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக உயிரிழந்தார்.  பாலமுருகனின் இறப்பிலிருந்து அவருடைய மனைவியும் மகளும் மீள முடியாமல் தவித்துள்ளனர் . […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய பேருந்து ஓட்டுனர்…. பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை….!!

இருசக்கர வாகனம் மோதி மினி பஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் மினி பஸ் டிரைவராக உள்ளார்.சம்பவத்தன்று வேல்முருகன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் வேல்முருகனின்  மோட்டார் சைக்கிளின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேல்முருகன் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் வேல்முருகனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீச்சல் பழகுவதில் அவசரம்… சிறுவனுக்கு நேர்ந்த கதி… வீணான நான்கு மணிநேர முயற்சி… கள்ளக்குறிச்சியில் சோகம்…!!

நீச்சல் பழகுவதற்காக கிணற்றுக்கு சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள்  சுப்பிரமணியன்-அய்யம்மாள் தம்பதியினர்.  இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற மகளும் தனுஷ்  என்ற மகனும் உள்ளனர்.  தனுஷ் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய கிணற்றில் நீச்சல் பழகுவதற்காக தனுஷ், பிரியதர்ஷினி மற்றும் மேலும் 2 பேர் என நான்கு பேர் சேர்ந்து கிணற்றுக்கு சென்றுள்ளனர்.  அப்போது தனுஷிற்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்த்தது தப்பா….? ஆற்றில் மூழ்கிய மாணவர்….நேர்ந்த துயரம்….!!

ஆற்றை வேடிக்கை பார்த்த மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (49). இவருக்கு அனுராதா (41) என்ற மனைவியும், மோகன்ராஜ்(19), அன்புமணி(14) என்ற 2 மகன்களும் உள்ளனர்.கோவிந்தராஜ் இறந்துவிட அனுராதா அவரது இரு மகன்களையும்  வளர்த்து வந்துள்ளார்.மோகன்ராஜ் ஒரு தனியார் கல்லூரியில் சுகாதார படிப்பு படித்து வருகிறார்.  அனுராதா குடும்பத்தினர், உறவினர்களுடன் கள்ளக்குறிச்சி அருகிலுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இக்கோவிலுக்கு அருகில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேலைய செய்… உத்தரவிட்ட மாமியார்…. மருமகள் எடுத்த முடிவு…!!

வீட்டு வேலை செய்யச் சொன்னதால் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாட்டூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் வெங்கடேசன்-தீபா.வெங்கடேசன் கூலித்தொழில் செய்து வருகிறார் .நேற்று முன்தினம் தீபாவை வெங்கடேசனின் தாயார் உண்ணாமலை வீட்டு வேலை செய்ய அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த தீபா தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீபாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கணவனை இழந்தவரோடு காதல்…. வேறு பெண்ணோடு கல்யாணம்…. இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்…!!

கணவனை இழந்த பெண் ஒருவர் தன்னை காதலித்து ஏமாற்றிய வாலிபரை ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் ரியாஸ் அகமது. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சென்னையில் வேலை செய்து வந்த போது அங்கு நஜீரா பானு என்ற பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளார். கணவனை இழந்த அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவர்களின் பழக்கம் நாளடைவில் நெருக்கமாகி, காதலித்து வந்துள்ளனர். இதனால் திருமணம் செய்யவும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அக்கா இடுப்பில் கைக்குழந்தை…. தீயை கொளுத்திய தங்கை…. இறுதியில் நடந்தது என்ன? பதறவைத்த காரணம் ….!!

சொத்து தகராறில் அக்காவை தங்கையே தீயிட்டு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் களத்தூர் கிராமத்தில் வசிக்கும் சின்னசாமி என்பவருக்கு சுமதி மற்றும் சுஜாதா என்று 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இந்நிலையில் சுஜாதா பிரசவத்துக்காக தன் தாய் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து மூத்த மகள் சுமதியும் தனது ஒரு வயது குழந்தையுடன் தன் தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சின்னசாமி மற்றும் அவரின் மனைவி […]

Categories

Tech |