Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“அஸ்வினி பூச்சிகளின் தாக்கம்” சாகுபடி குறையும் அபாயம்…. வேதனையில் விவசாயிகள்…!!

அஸ்வினி பூச்சிகளை அழிக்கும் மருந்துகள் குறித்த ஆலோசனையை வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் விவசாயத்தை முதன்மைத் தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் மக்காச்சோளம், கரும்பு, நெல், பயிர் வகைகள், மஞ்சள், வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இவர்கள் கடந்த 3 மாதத்திற்கு முன்பாக கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்த கரும்பு பயிர்களை பூச்சிகள் பெருமளவு தாக்கி சேதப்படுத்துகிறது. இதன் காரணமாக கரும்பு சாகுபடி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

விவசாய சங்கத்தினர்கள்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக மாற்ற வேண்டும் எனவும், அதற்கு கூலி ரூபாய் 600 ஆக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து உழவர் பாதுகாப்பு திட்டத்தை மேம்படுத்த வேண்டும் எனவும், 6 லட்சம் மதிப்பில் புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பற்றி எறிந்த தீ…. வெடித்து சிதறிய உடல்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

பயங்கர தீ விபத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாய்க்கால் மேட்டுத்தெரு பகுதியில் ஷேக்தாவூத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசு தயாரிக்கும் குடோன் வைத்து நடத்தியுள்ளார். இந்த குடோனில் நாட்டு வெடி மற்றும் வானவேடிக்கை வெடிகள் தயாரிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஷேக்தாவூத்  இறந்ததார். இதன்பிறகு ஷேக்தாவூத்தின் மகன்கள் பட்டாசு குடோனை நடத்தி வந்துள்ளனர். இந்த குடோனின் உரிமம் கடந்த 2019-ஆம் வருடத்துடன் முடிவடைந்தது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“குழந்தைகளை கொன்ற தாய்” பிணமாக தொங்கிய கொடூரம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!

குழந்தைகளைக் கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே அம்மன் கொல்லைமேட்டு பகுதியில் ஏழுமலை-கௌரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அருணா (3) என்ற மகளும் பூமிநாதன் (1) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கௌரி தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு குழந்தைகள் 2 பேருக்கும் கௌரி விஷம் கொடுத்துள்ளார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“தட்டச்சு தேர்வு” வெளியான சூப்பர் தகவல்…. மாநில தலைவரின் அறிக்கை…!!

தட்டச்சு தேர்வுக்கான விவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக தட்டச்சு பயிலக சங்கத்தின் மாநில தலைவர் வைத்தியநாதன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தட்டச்சு தேர்வு வருகிற 26-ஆம் தேதி 185 மையங்களில் நடைபெறவிருக்கிறது என கூறியுள்ளார். இதில் 26-ம்‌ தேதி தமிழ் மற்றும்‌ ஆங்கிலம் இளநிலை தேர்வுக்கான 3 அணிகளுக்கும், முதுநிலை தேர்வுக்கான 2 அணிகளுக்கும் தேர்வு  நடைபெறவிருக்கிறது. இதைத்தொடர்ந்து 27-ம்‌ தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்வுகளின் 4-வது மற்றும் 5-வது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. “2,000 லிட்டர் சாராய ஊரல்”…. போலீஸ் வலைவீச்சு…!!

காவல்துறையினரால் 2,000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் ஒரு குழு அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மங்குனி தோட்டம் வனப்பகுதியில் சந்தகேப்படும்படியாக டிரம்கள் இருந்துள்ளது. உடனே காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அதில்  மர்மநபர்கள் சாராய காய்ச்சுவதற்கான ஊறலை வைத்திருந்தனர். அதில் மொத்தம் 2,000 லிட்டர் சாராய ஊறல் இருந்தது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற மயானக்கொல்லை திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற மயானக்கொல்லை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே மேல்சிருவள்ளூர் கிராமத்தில் புகழ்பெற்ற அங்காளி காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மயானக்கொல்லை திருவிழா கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் அம்மனுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“அமோகமான விளைச்சல்” உரிய இலாபம் கிடைக்கவில்லை…. வேதனையில் விவசாயிகள்…!!

மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு உரிய லாபம் பெற்றுத்தர வேண்டிமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதியில் இருக்கும் கல்படை, பொட்டியம், மயிலம்பாடி, மட்டியப்பாறை, மாவடிப்பட்டு, கரியலூர் உள்ளிட்ட 150 கிராமங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த கிராமங்களில் மரவள்ளி கிழங்குகள் அமோகமாக விளைந்துள்ளது. இருப்பினும் 1 டன் மரவள்ளிக்கிழங்கு ரூபாய் 2,500 முதல் 3,500 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள்  போட்ட முதலை கூட எடுக்க முடியாமல்  […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற பால்குட திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற பால்குட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே வடசென்னிமலை பகுதியில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 9-ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாகத் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து 4-ஆம் நாள் திருவிழாவில் கோட்டைமேடு பகுதியில் ஏராளமான பக்தர்கள் ஒன்று திரண்டு வழிபாடு நடத்தியுள்ளனர். அதன்பிறகு பக்தர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற பூஜைகள்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் பகுதியில் பிரசித்தி பெற்ற குந்தவேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து 6-ம் நாள் திருவிழாவில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் போன்ற பல்வேறு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“10 கிலோமீட்டர் தூரம்” கட்டிலில் தூக்கி சென்ற கொடூரம்…. அவதிப்படும் பொதுமக்கள்…!!

உடல் நலம் சரியில்லாத நபரை பொதுமக்கள் கட்டிலில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.   கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் வைலம்பாடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சாலை வசதி, பேருந்து வசதி, மருத்துவம் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக கடை வீதிக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பயங்கர தீ விபத்து…. பற்றி எறிந்த குடோன்…. பெரும் பரபரப்பு…!!

சாக்கு குடோன் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே அகண்டநல்லூர் கிராமத்தில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் சாக்கு குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் திடீரென தீ பிடித்துள்ளது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்த தீ குடோன்  முழுவதும் வேகமாக பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் கள்ளக்குறிச்சி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கால்நடைகளுக்கு பரிசோதனை…. சிறப்பாக நடைபெற்ற மருத்துவ முகாம்…!!

கால்நடை மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து  நோயுற்ற மாடுகளுக்கு  மருத்துவ  பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சினை பரிசோதனை, வயிற்று புழு நீக்கம்,  செயற்கை முறை கருவூட்டல், உள்ளிட்ட பல சோதனைகள் செய்யப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி, […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இணையதளத்தில் வைரல்…. பதற்றத்தில் ஊர் பிரமுகர்கள்…. போலீஸ் எச்சரிக்கை…!!

சாராய விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தெங்கியாநத்தம் மற்றும் மண் மலை கிராமங்களில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக இணையதளங்களில் செய்தி பரவியுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஊரின் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டம் கச்சிராப்பாளையம் காவல்நிலையத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நல்லாத்தூர், பரிகம், மாத்தூர், மாதவச்சேரி, கரடிசித்தர், மண் மலை கிராமத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கலந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

புகையிலை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே பவுஞ்சிபட்டு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் சௌகத் அலி தலைமையில் ஒரு குழு அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது அந்த பகுதியில் இருக்கும் ஒரு கடையில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.  அதை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காணாமல் போன வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன வாலிபர் சடலமாக  மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் இருக்கும் அத்தியூர் கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்தன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காட்டுக்கோட்டையில் இருக்கும் ஒரு அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி விடுமுறை காரணமாக தற்போது ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அரவிந்தன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அரவிந்தனின் பெற்றோர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கர்ப்பமாக இருக்கும் சிறுமி…. வாலிபரின் கொடூரச்செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தாயாக்கிய வாலிபரை  காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் பகுதியில் இருக்கும் சித்தலிங்க மடத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருக்கிறார். இவருக்கும் தொழிலாளியான விக்னேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் காரணமாக சிறுமி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

35 வருடங்களாக ஆக்ரமிப்பு…. அவதியில் பொதுமக்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே குளத்தூரில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையை கடந்த 35 வருடங்களாக தனிநபர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் அய்யம்மாள் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடத்திற்கு  சென்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேளாண்மை மற்றும் கால்நடை திட்டங்கள்…. சிறப்பாக நடைபெற்ற விவசாய கலந்துரையாடல்…!!

விவசாய கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நிறைமதி கிராமத்தில் விவசாய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேலாண்மை மற்றும் உழவர் நலத்துறை, விவசாயிகள் விஞ்ஞானிகள் ஆகியோர் உரையாடினார். இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி தலைமை தாங்கினார். இவர்கள் வேளாண்மை திட்டங்கள் மற்றும் கால்நடை திட்டங்கள் குறித்து பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம், உதவி இயக்குனர் நடராஜன், டாக்டர் பெரியசாமி, வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விசாரணைக்காக அழைத்து சென்ற கைதி…. பேருந்தில் நடந்த விபரீதம்…. பெரும் பரபரப்பு…!!

காவல்துறையினரிடம் இருந்து  ஆயுள் தண்டனை கைதி தப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குப்பிநாயக்கன்பட்டியில் முருகவேல் என்ற பைனான்ஸ் ராஜா வசித்து வருகிறார். இவர் மீது ஏராளமான கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் இருந்தது.  இவரை காவல்துறையினர் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் முருகவேல் மீது இருக்கும் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காவல்துறையினர் முருகவேலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஆணையை வழங்கவில்லை” ஜாமீனில் வெளியே வந்த நபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…!!

நீதிமன்றத்தின் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தின் முன்பாக ஒருவர் கையில் டீசலுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்த காவல்துறையினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தி விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்த விசாரணையில் அவர் மேட்டூநன்னாவரம் பகுதியைச் சேர்ந்த ராஜாராமன் என்பது தெரியவந்தது. இவர் முடி திருத்தும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“300 கர்ப்பிணி பெண்கள்” சிறப்பாக நடைபெற்ற வளைகாப்பு விழா…. சீர்வரிசை வழங்கிய எம்.எல்.ஏ…!!

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக  நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் 300 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜவேல் தலைமை தாங்கினார். இந்த விழாவின் சிறப்பு அழைப்பாளராக மணிகண்ணன் எம்.எல்.ஏ கலந்துகொண்டார். இவர் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். இந்த விழா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் சமூகநலம் சார்பில் நடத்தப்பட்டது. மேலும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்த பெண்…. மர்ம நபரின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன்  தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் செல்லத்துரை தனது குடும்பத்துடன் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் பின்பக்க கதவை உடைத்து  வீட்டிற்குள் வந்துள்ளார். இதனையடுத்து அந்த மர்ம நபர் தூங்கிக்கொண்டிருந்த செல்லத்துரையின் மருமகள் சௌந்தர்யா கழுத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மோதலில் ஈடுபட்ட மாணவர்கள்…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு…!!

பள்ளி மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் இருக்கும் அரசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில்  பள்ளியில் படிக்கும் இரு தரப்பு மாணவர்களிடையே சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் மீண்டும் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. அந்த தகவலின்படி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சாராயம் காய்ச்சிய நபர்  கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் இருக்கும் கிழக்கு காட்டுக்கொட்டாயில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டத்திற்கு புறம்பாக சாராயம் காய்ச்சி அதை விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த மாதம் 17-ஆம் தேதி சின்னசேலம் காவல்துறையினர் கனியாமூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ராஜேந்திரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் அரங்கேறிய கொடூரம்…. 2 பேர் பலியான சோகம்…. பெரும் பரபரப்பு…!!

ஒரே நாளில் நடைபெற்ற இரு வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் இருக்கும் ஒதியத்தூர் கிராமத்தில் ஜெகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் வசிக்கும் இவரது நண்பரான ஹரி என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் கெடார் பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் ஒரு தனியார் கல்லூரியின் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்திபெற்ற பெரியநாயகி அம்மன்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் அருகில் சித்தலூர் கிராமத்தில் புகழ்பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த வருடமும் கடந்த 1-ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தேர் திருவிழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து மயானகொல்லை நிகழ்ச்சி வெகுவிமர்சையாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பள்ளிக்கு சென்ற சிறுமி” தொழிலாளியின் கொடூரச்செயல்…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…!!

பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்பாரம்பட்டு காலனியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளிக்கு சென்ற 8 வயது சிறுமியிடம் 10 ரூபாய் பணம் கொடுத்து மிட்டாய் வாங்கி வரும்படி கூறியுள்ளார். அந்த சிறுமி அதைப் பெற்றுக்கொண்டு மிட்டாய் வாங்கி விட்டு மீதி பணத்தை இளையராஜாவிடம் கொடுத்துள்ளார். அப்போது அந்த நபர் சிறுமியை  கடத்தி சென்று பாலியல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“எனது அழைப்பை எடுக்கவில்லை” நண்பரின் வெறிச்செயல்…. போலீஸ் அதிரடி…!!

செல்போனை எடுத்து பேசாததால் நண்பனை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே கரீம்சாதக்காவில் சையத் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்புக்கடை வைத்து நடத்தி வருகிறார். இதே பகுதியில் முகமது இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் முகமது இப்ராகிம் அவசர தேவைக்காக சையது உசேனை பல முறை போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சையத் உசேன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக வாலிபர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.   கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேஷசமுத்திரம் பகுதியில் சின்னராசு என்பவர் வசித்து வருகிறார். இவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்த சங்கராபுரம் காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பதுக்கி வைத்திருந்த 108 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர். அதன்பிறகு சின்னராசுவையும்  கைது செய்தனர். இவர் மீது காவல்துறையில் சாராய  வழக்குகள் பல நிலுவையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

புகழ்பெற்ற உலகளந்த பெருமாள் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் பகுதியில் புகழ் பெற்ற உலகளந்த பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த வருடமும் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதைதொடர்ந்து ஹம்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்துள்ளனர். இந்த திருவிழாவை முன்னிட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“முட்புதரில் கிடந்த பொருள்” அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு முட்புதர்களுக்கு இடையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகே சின்னசேலம் பகுதியில் காகித ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையின் அருகே இருக்கும் ஒரு முட்புதரில்  மரத்தால் செய்யப்பட்ட ஒரு உண்டியல் கிடந்துள்ளது. அவ்வழியே சென்ற சிலர் இந்த உண்டியலை பார்த்து கச்சிராபாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்‌. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த உண்டியலை  கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து கடத்தப்பட்ட பொருள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. வசமாக சிக்கிய வாலிபர்…!!

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே உள்ள பாவளம் பகுதியில் குபேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டின் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். திடீரென அந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போய்விட்டது. உடனே அருகில் இருந்த இடங்களில் குபேந்திரன் தன்னுடைய மோட்டார் சைக்கிளை தேடி பார்த்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் மோட்டார்சைக்கிள் கிடைக்கவில்லை. இதேபோன்று அந்தப் பகுதியில் வசிக்கும் செல்வராஜ் மற்றும் ரமேஷ் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய கார்…. சோதனையில் தெரிந்த உண்மை…. வசமாக சிக்கிய சிறுவன்…!!

17 வயது சிறுவன் சாராயம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகில் இருக்கும் சேந்தமங்கலம் பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து திருநாவலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபத்தில் சிக்கிய காரை பார்த்துள்ளனர். அப்போது அந்த காருக்குள் சாராயம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் காருக்குள் இருந்த  சாராயத்தை  பறிமுதல் செய்தனர். அதில் மொத்தம் 200 லிட்டர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை…. கிராம மக்களின் கையேந்தும் போராட்டம்….!!

பழமையான குளத்தை தூய்மைப்படுத்த வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருவங்கூர் என்ற கிராமத்தில் பழமையான குளம் ஒன்று உள்ளது. அந்தப் பகுதி மக்கள் அந்த குளத்தில் இருந்துதான் பயன்பாட்டிற்காக‌ தண்ணீர் எடுத்துள்ளனர். ஆனால் அந்த குளத்தில் கழிவு நீர் கலப்பதால் சில ஆண்டுகளாக அந்த நீரை உபயோகப்படுத்த முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும்  இதுவரை எந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கணவருக்கு ஏற்பட்ட “விக்கல்”…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகில் காரனுர்  கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் நல்லாத்தூர் கிராமத்தில் வசிக்கும் மஞ்சு என்ற பெண்ணும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு  காதலித்து திருமணம் செய்து உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வீட்டில் மதிய உணவு அருந்திக் கொண்டிருக்கும்போது  திடீரென  பெரியசாமிக்கு விக்கல் ஏற்பட்டுள்ளது. உடனே தண்ணீர் எடுப்பதற்காக மஞ்சு சமையலறைக்குள் சென்றுள்ளார்.  இந்நிலையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதிக்கு அருகிலுள்ள மணலூர் கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்தில் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அருள்  தனது மோட்டார் சைக்கிளில் சிறுவள்ளூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நின்ற டிராக்டர் மீது அருளின் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அருள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு…. போலீஸாரின் அதிரடி நடவடிக்கை…!!

மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்த சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்து அழித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி  கச்சிராப்பள்ளி காவல்துறையினர் கல்ராயன்மலை வனப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மர்ம நபர்கள் 4 பெரிய டிரம்களில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் போட்டு  வைத்திருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து  காவல்துறையினர் சாராய ஊறலை பறிமுதல் செய்து கீழே கொட்டி அவிழ்த்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை மீறி ஏரி, குளங்களில் மீன் ஏலம்…. கடுமையான நடவடிக்கை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வருடம்தோறும் பொதுப்பணித் துறை, மீன்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய் துறை மூலம் மீன் குத்தகைக்கு விடப்பட்டு அரசுக்கு வருவாய் ஈட்டும் நடைமுறை உள்ளது. தமிழக அரசுத் துறைக்கு சொந்தமான நீர்நிலைகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் அல்லது அவர்களை சார்ந்த தனிநபர்கள் குழுவாக இணைந்து அரசு விதிமுறைகளை மீறி, அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் சட்ட விதிகளுக்கு உட்படாமல் பொது ஏலம் விடுபவர் மற்றும் மீன் பிடிப்பவர் ஆகியோர் மீது அபராதம் […]

Categories
மாவட்ட செய்திகள்

ரேஷன் கடைக்கு சென்ற 16 வயது சிறுமி…. திடீரென மலர்ந்த காதல்…. பின்னர் நடந்த விபரீதம்…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் உள்ள கிராமத்தில் 16 வயது சிறுமி அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி ரேஷன் கடைக்கு சென்ற பொது அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இந்தச் சிறுமியே வெங்கடேஷ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நெருங்கி பழகியுள்ளார். இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனிடையில் சிறுமி கொரோனா பரவல் காரணமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுத ஊராட்சி மன்ற துணைத் தலைவர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

திடீரென மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுத ஊராட்சி மன்ற துணை தலைவர். கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர் கிராமத்தில் ராஜேஸ்வரி ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார். இந்த நிலையில், ராஜேஸ்வரி நேற்று மாவட்ட ஆட்சியரை பார்த்து மனு அளிப்பதற்காக வந்துள்ளார். அப்போது திடீரென மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து அழுதுள்ளார். இதை பார்த்து பதறிப்போன ஆட்சியர் ஸ்ரீதர், ராஜேஸ்வரியை அழைத்து சென்று விசாரணை செய்துள்ளார். அந்த விசாரணையில் துணைத் தலைவி ராஜேஸ்வரி, கடந்த 5-ஆம் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெளியான புது அறிவிப்பு…! 1இல்ல 2இல்ல 19மாவட்டத்துக்கு லீவ்… குஷியான மாணவர்கள் …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களே …! 16 மாவட்ட கல்லூரிகளுக்கு லீவ்- சற்றுமுன் வெளியான அறிவிப்பு …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கள்ளக்குறிச்சியில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று  16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி, பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், அறியலூர், தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, விருதுநகர்,நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மதுரை, திருவாரூர், ராமநாதபுரம், கடலூர்  மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவன் தூக்கிலும், மாணவி ஆற்றிலும்… பதைபதைக்க வைக்கும் சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகள் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 20ஆம் தேதி மாலை 7 மணியளவில் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தினால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன மாணவியை தேடிவந்தனர். இதற்கிடையே நேற்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மணிமுத்தா நதி…. 79 நாட்கள் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு…. அரசு உத்தரவு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4,250 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், மணிமுத்தா நதி அணையிலிருந்து இன்று முதல் பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி வரை பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஆணையிடப்பட்டுள்ளதாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து மணிமுத்தா நதி அணையிலிருந்து 79 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஜெய்பீம் பட பாணியில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த – 5 பேர் கைது செய்யப்பட்டார்களா?

கள்ளக்குறிச்சியில் ஜெய்பீம் பட பாணியில் இந்து மலைக்குறவன் சமூகத்தைச் சேர்ந்த 5 நபர்களை, காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தி வருவதாக அவர்களின் உறவினர்கள் புகார் அளித்திருந்த நிலையில், 3 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது காணலாம். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தியாகதுருகம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் சமூகத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 14ஆம் நாள் சின்னசேலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: மேலும் ஒரு மாவட்டத்தில்…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!!

தொடர் மழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தபோது பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றனர். சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு கடையில் விபத்து …6 பேர்உயிரிழப்பு ….இரங்கல் தெரிவித்த ராமதாஸ் ….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பட்டாசு கடையில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர் மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில், “சங்கராபுரத்தில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்து 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதையடுத்து […]

Categories

Tech |