கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்திருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பான விசாரணை குறித்து அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு ஏற்கனவே சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதால் இந்த வழக்கை ஏன் முடித்து வைக்க கூடாது என்று நீதிபதி மனுதாரர் […]
