ராமநாதபுரத்தில் கள்ளகாதலர்களை கண்டித்த மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தில் கோவிந்தன் மற்றும் அவருடைய மனைவி காளிமுத்தம்மாள்(92) வசித்து வந்துள்ளார். இதனையடுத்து காளிமுத்தம்மாவின் தென்னந்தோப்பில் அதே பகுதியை சேர்ந்த முத்துராக்கு என்ற 27 வயதான பெண் வேலை பார்த்து வந்த நிலையில் அவருக்கும் மாவிலங்கு கிராமத்தை சேர்ந்தவரான வடிவேல் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் முத்துராக்குவை பார்ப்பதற்காக வடிவேல் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் […]
