நடத்தையில் சந்தேகப்பட்டு கள்ளக் காதலியை அடித்துக்கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள உமையாள்பதி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் தமிழ்மணிக்கும் சென்ற 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 2 மகன்கள் இருக்கின்றார்கள். இந்த நிலையில் தமிழ்மணி கணவர் மற்றும் மகன்களை பிரிந்து தனது தந்தை வீட்டில் தான் இருந்து அங்கிருக்கும் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். அப்பொழுது செந்தில் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. […]
