சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை அருகே கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே இருக்கும் காளத்தியேந்தல் கிராமத்தில் கண்மாய் கரை ஓரமாக ஓவியத்துடன் கூடிய ஒரு கல் கிடைத்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சமயகுமார் என்பவர் வரலாற்று ஆர்வலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது அந்த கல் 300 வருடங்களுக்கு முற்பட்டது என தெரியவந்தது. மேலும் […]
