பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா கேரள மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்திய நிலையில், பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தது. பல்வேறு இடங்களில் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டது. கோழிக்கோடு, வயநாடு, திருவனந்தபுரம், ஆலப்புழா, பந்தளம், கொல்லம், திருச்சூர், கண்ணூர் போன்ற இடங்களில் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டது. கோழிக்கோடு மாவட்டத்தில் 3 இடங்களில் கல்வீச்சு நடைபெற்றது. 2 இடங்களில் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டது. பெங்களூரு நோக்கிச் சென்ற […]
