கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என சென்னை உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை கூறியுள்ளது. நன்கொடைகளுக்கு வருமான வரித்துறை விதிக்கும் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சபிக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இதனை அடுத்து இந்த வழக்கில் பேசிய நீதிபதிகள் கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மாநில அரசுகளின் […]
