திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் சாந்தி பிரியா என்பவர் கணித பாட முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் மீது மாணவிகள் தொடர்ச்சியாக பல்வேறு புகார்களை எழுப்பி வருகின்றார்கள். அதாவது மாணவி ஒருவரிடம் தீண்டாமை உணர்வுடன் நடந்து கொண்டதாகவும் வேதியல் ஆய்வகத்தில் அமிலக் குடுவைகளின் அருகில் தனியாக அமர வைத்ததாகவும், பள்ளிகளில் பாடம் நடத்தாமல் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. மேலும் மற்றொரு மாணவியை மருமகளே என அழைத்து […]
