உயர்கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து கருத்துக்களை கூறலாம் என மத்திய அரசு கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. பெற்றோர்கள் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், உயர்கல்வி நிறுவனங்களின் தரம் பற்றி கருத்துக் கூறலாம். அதன்படி www.nirfindia.org என்ற இணையதளத்தில் மார்ச் 27க்குள் கருத்துக்களை முன்வைக்கலாம். அனைத்து தரப்பின் கருத்துக்களை பரிசீலித்த பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.
