அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும் என தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பு நிலை ஆசிரியர்கள் ஆகியோர் பள்ளிக்கு வர வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகளும் மூடப்பட்டன. […]
