அரசின் தொடக்க அனுமதி பெறாமல் செயல்பட்டு வரும் 415 தனியார் பள்ளிகள் வருகிற கல்வியாண்டில் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பேரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இயக்குனரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 25 பள்ளிகள் தொடக்க அனுமதி பெறாமல் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. தொடக்க கல்வித்துறையில் செயல்பட்டு வரும் […]
