கோவை மாவட்டம் சரவணம் பட்டி துடியலூர் போகும் சாலையில் இயங்கிவரும் தனியார் கல்லூரி வளாகத்திற்குள் தெரு நாய் ஒன்று நுழைந்துள்ளது. இதனால் கல்லூரி ஊழியர்கள் அதை விரட்டியுள்ளனர். அப்போது ஊழியர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற நாய் ஒரு புதரில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து ஊழியர்கள் கற்கள் மற்றும் கட்டையை வைத்து நாயை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அதன்பின் கயிறு வாயிலாக அந்த நாயை இரண்டு பேர் இழுத்துச் சென்று வெளியில் எரிந்துள்ளனர். […]
