கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாவறை புளியறத்தலை பகுதியில் சின்னப்பர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூன்றாவது மகள் அபிதா களியக்காவிளை பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 1-ஆம் தேதி வயிற்று வலியால் அவதிப்பட்ட அபிதாவை பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபிதா கடந்த 5-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அபிதாவின் தாய் தங்கபாய் நித்திரவிளை காவல் […]
