ராமநாதபுரம் அருகே உடல்நிலை சரியில்லாத கல்லூரி மாணவிக்கு பேய் விரட்டுவதாக கூறி சாட்டையால் அடித்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அருகே உள்ள கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வீர செல்வம். அவரது மனைவி கவிதா இறந்துவிட்ட நிலையில், மகன் கோபிநாத், தாரணி ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தாரணிக்கு காய்ச்சல் வந்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.ஆனால் தாரணிக்கு சிகிச்சை அளிக்காமல் பேய் பிடித்துள்ளதாக கூறி அவரை திருப்பாலை குடியில் உள்ள கோடங்கியிடம் தந்தை […]
