கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யா, தந்தை மாணிக்கத்தின் உடற்கூறாய்வு நிறைவு பெற்றுள்ளது. சென்னை பரங்கி மலையில் கல்லூரி மாணவி சத்யாவை 5 ஆண்டுகளாக காதலித்து வந்த சதீஷ் ரயிலின் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவத்தில் சத்யாவின் உடலையும், அதே நேரத்தில் தனது மகள் உயிரிழந்த காரணத்தினால் மனமுடைந்து மயில் துத்தம் என்ற விஷத்தை மதுவில் கலந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை மாணிக்கத்தின் உடலும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. […]
