கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை சத்தியமூர்த்தி நகரில் முத்துக்குமார்(56) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முத்துக்குமாருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவரான பிரவீன் குமார்(20) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் முத்துக்குமார் அப்பகுதியில் இருக்கும் திருமண மண்டபம் அருகே நடந்து சென்ற போது பிரவீன் குமார் அவருடன் தகராறு செய்துள்ளார். மேலும் கோபத்தில் பிரவீன் குமார் முத்துக்குமாரை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் […]
