மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் குடிநீர் வசதி, கழிப்பறை, ஆய்வகம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இந்த கல்லூரியில் பேராசிரியர்களும் போதுமான அளவுக்கு இல்லை. இதனால் மாணவர்கள் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரியும், போதுமான அளவு பேராசிரியர்களை நியமிக்கக்கோரியும் மாவட்ட ஆட்சியர் […]
