பொறியியல் கல்லூரி மாணவரை தாக்கிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாலாட்டின்புதூர் வி.பி. சிந்தன் நகர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மந்திரமூர்த்தி என்ற மகன் உள்ளார். இவர் நெல்லை பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது உறவினர்களான அதே பகுதியில் வசிக்கும் மாயாண்டி, முத்துராஜ் ஆகியோருக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தனது வீட்டருகே மந்திரமூர்த்தி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாயாண்டி, முத்துராஜ் […]
