பாலியல் புகாரில் கைதான பேராசிரியர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் ஆசிரியராக பணிபுரியும் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்கலைக்கழக பதிவாளராகவும் இருக்கிறார். இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், வேதியல் துறையில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வந்த மாணவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பாடம் சம்பந்தமான சந்தேகங்களை தீர்ப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். இதை நம்பிய மாணவியும் பேராசிரியர் வீட்டிற்கு சென்றுள்ளார். […]
