2021-22 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று முன்தினம் ( பிப்.14 ) முதல் திறக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கல்லூரி விடுதிகளில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் மருத்துவக்கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. அதன்படி கல்லூரி விழாக்கள் மற்றும் கூட்டங்கள் நடத்தவும், நூலகத்தில் கூட்டம் கூடவும் அனுமதி இல்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் அனைத்து மாணவர்களும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை வகுப்பறைகளில் பின்பற்ற வேண்டும் […]
