விழுப்புரம் மாவட்டம் சின்னபாபு சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகள் தனலட்சுமி (வயது 19). இவர் கடலூர் செம் மண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கல்லூரியில் மாதிரி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்ற காலை கல்லூரிக்கு வந்த மாணவி, கல்லூரியின் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் […]
