மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே மேலவீதி பகுதியில் மாற்றுத்திறனாளியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், விஜய் என்ற மகனும், நந்தினி, ரோஜா என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இவர் சின்னசாமி என்பவரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அங்கு குடும்பத்தோடு தங்கியுள்ளனர். இந்நிலையில் முருகேசனின் 2-வது மகளான ரோஜா ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ படித்து வந்துள்ளார். இவரை தாண்டவராயபுரம் […]
