தண்ணீரில் மிதக்கும் அதிசய கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியம்பாளையம் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு கல்லை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சுரேஷின் வீட்டில் ஒரு ஓரமாக வைக்கப்பட்டிருந்த கல்லை தண்ணீரில் போட்டுள்ளனர். ஆனால் அந்தக் கல் தண்ணீரில் மூழ்காமல் மிதந்துள்ளது. இதனை பார்த்து ஆச்சரியமடைந்த சுரேஷ் […]
