தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 – 9ஆம் வகுப்பு வரை கலை பண்பாடு செயல்பாடுகள் கட்டாயம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 – 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் இசை, நடனம், காட்சிக்கலை, நாடகம், இரு பாடவேளைகளை கலை, பண்பாடு செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. நாட்டுப்புறக் கலை ஆகிய 5 கலைச் செயல்பாடுகளில் மாணவர்கள் ஒன்றைத் தேர்வு செய்யலாம் என அறிவித்துள்ளது.
