சென்னை தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி கடந்த 1639-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த சென்னை மாநகரம் உருவாக்கப்பட்டு தற்போது 383 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சென்னை மாநகரம் பொருளாதார ரீதியாக படிப்படியாக உயர்வடைந்து தற்போது அனைத்து மக்களையும் வாழ வைக்கக்கூடிய ஒரு நகரமாகவே திகழ்கிறது. இதனால் தான் சென்னையை வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்று அழைக்கின்றனர். இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. […]
