மயிலாடுதுறை மாவட்டம் கலெக்டர் லலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் தமிழகத்தில் வருடந்தோறும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி ஒரு சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கி கவுரவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் சென்ற 2021ஆம் வருடத்துக்கான இந்த விருதுக்கு உரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதில் ரூபாய் 5 லட்சம் பரிசு தொகையுடன், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இதில் விண்ணப்பதாரர் […]
