இந்திய முழுவதும் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு பேசினார். அப்போது, அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளை செயல்படுவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் தமிழக மக்களுக்கு சத்தான உணவு பொருட்கள் வழங்கும் பொருட்டு சிறப்பு பொது விநியோகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 407 உணவகங்களும், […]
