மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் பாளையங்கோட்டை சேர்ந்த அய்யா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2013-ம் ஆண்டு மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி பல்வேறு மாவட்டங்களில் மனித கழிவுகளை மனிதனை அகற்றும் அவலம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே மனித கழிவுகளை இயந்திரங்களின் உதவியுடன் ரோபோட் மூலம் சுத்தம் செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. […]
