கள்ளக்குறிச்சி மாவட்டம் கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இருப்பதாவது “தனியார் இல்லங்கள் மற்றும் விடுதிகளின் தரத்தை உறுதிப்படுத்தும் அடிப்படையில் முறையாக உரிமம்பெறாமல் இயங்கிவரும் விடுதிகள், இல்லங்கள் உடனே உரிமம் பெறுவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் விடுதியின் உரிமம்பெற தீயணைப்பு மற்றும் சுகாதார சான்றிதழ், கட்டிட உறுதித்தன்மை சான்று, பார்ம் டி உரிமம் போன்றவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் விடுதி நடத்தப்படவேண்டும். அதுமட்டுமல்லாமல் சிறார்களுக்கு 40 சதுரஅடி […]
