மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பணி முடிந்து வீட்டுக்கு செல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மொட்டைமாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் இன்று காலை பணிக்கு வந்த சக ஊழியர்கள் மொட்டை […]
