பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கோவிட்-19 செலவினங்களுக்கான நிதியை அதிகரிக்கும் நடவடிக்கையாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது. வரி அதிகரிக்கப்பட்டால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான கலால் வரி 37 ரூபாய் 98 காசுகளாகவும் அதிகரிக்கும். டீசலுக்கான கலால் வரி 36 ரூபாய் 98 காசுகள் வரை உயரக்கூடும். நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்ற 2014ஆம் ஆண்டு […]
