நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே 17 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த 25ஆம் தேதி இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே ஜாதிவாரியாக கலர் கயிறு கட்டுவது தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளது. அப்போது அங்கு பயிலும் செல்வ சூரியன் என்ற பனிரெண்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் தாக்கியுள்ளனர். இந்த சம்பவமானது அந்தப் பள்ளியில் பகல் நேரத்தில் அரங்கேறியுள்ளது. காயமடைந்த […]
