பிரபலமான கலர் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக 2 மெகா தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி வருகிற 10-ம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஜமீலா என்ற தொடரும், இரவு 9 மணி அளவில் உள்ளதை அள்ளித்தா தொடரும் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த 2 தொடர்களுமே பெண்கள் சாதிக்க துடிப்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜமீலா தொடரில் ஹீரோயின் ஆக நடிக்கும் தன்வி ராவ் சீரியல் குறித்து பேட்டி அளித்துள்ளார். […]
