காதல் திருமணம் செய்த 45 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீரணிப்பட்டியை சேர்ந்த இளம்பெண் கற்பகம். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியனை காதலித்து வந்துள்ளார். வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த இருவரும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் எனது மகளை காணவில்லை என்று கற்பகத்தின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் […]
