தமிழகத்தில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு தேர்வாணையம் மூலமாக மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கௌதம் சித்தார்த்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் குரூப் 4 பணியிடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்று 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து எந்த ஒரு தகவலும் இடம் பெறவில்லை. […]
