நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்தி வேலூர் அடுத்த தேவனம்பாளையம் பகுதியில் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு புகார் வந்தது. அந்த புகாரின்படி சேலம் அலகு ஆய்வாளர் பாலமுருகன், நாமக்கல் காவல் அலகு எஸ்.ஐ. அகிலன் போன்றோர் அடங்கிய குழுவினர் பரமத்தி வேலூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் எந்த வித உரிமையோ, ஆவணமோ இன்றி […]
