மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வாணியம்பாடி கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்கள். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இஸ்லாமியா கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி மாணவர்கள் தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பாக தஞ்சாவூர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்கள். இங்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயம்,குண்டு எறிதல், வட்டு எறிதல் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், […]
