கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதற்கு நிபுணர் குழு அமைக்க வேண்டும். இதற்காக பள்ளிகளில் உள்ள பெற்றோர் ,ஆசிரியர் சங்கங்களை மறு சீரமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இளங்கோ என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக பள்ளிக்கல்வி ஆணையத்தின் சார்பில் இணை இயக்குனர் அமுதவல்லி பதில் மனு தாக்கல் செய்தார். அந்த […]
