பெரம்பலூரில் வீட்டில் விளக்கு ஏற்றும் போது கற்பூரம் தவறிவிழுந்து சேலை தீப்பற்றியதில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சன்னதி தெருவில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்தார். இவர் புரோகிதராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தர்மாம்பாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ராமமூர்த்தி என்ற மகன் உள்ளார். ராமமூர்த்தி குரும்பலூர் பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். பாலசுப்ரமணியன் சில வருடங்களுக்கு முன்பு காலமானார். இதையடுத்து தர்மாம்பாள் தனது […]
