நோய்களை தீர்க்கும் புண்ணிய தலமாக விளங்கும் திருத்தேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். கற்கடம் என்றால் நண்டு. நண்டு பூசித்த தலமாதலால் ஈஸ்வரர் கற்கடேஸ்வரர் ஆனார். தற்பாேது இக்கோவில் நண்டான்கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இந்த ஊர் திருந்துதேவன்குடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்திரன் சாபத்திற்கு ஆளான கந்தர்வன் நண்டாக இவ்வாலயம் வந்து பூசித்தார். தினமும் நள்ளிரவில் தீர்த்த குளத்தில் தாமரை மலரை கோமுகம் இறைவனுக்கு சாத்தி வழிபட்டு வந்தது. இந்திரன் அதிகாலையில் இந்த […]
