சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் கறிவேப்பிலை பயிரிடப்பட்டு வருகிறது. இந்த கறிவேப்பிலை வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு அதிகளவில் காணப் படுவதன் காரணமாக கருவேப்பிலையில் வெள்ளை நோய் ஏற்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் சந்தைக்கு குறைந்த அளவில் கறிவேப்பிலை வருவதால் ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. […]
