கர்ப்பிணி பெண் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு அருகே கேரளபுரம் பகுதியில் கில்பர்ட் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் ஏஞ்சல் சகாரின் என்பவருக்கும், கில்பர்ட் ராஜனுக்கும் வழிப்பாதை சம்மந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தன்னுடைய வீட்டின் முன்பாக கில்பர்ட் ராஜன் நின்று கொண்டிருந்தார். அப்போது ஏஞ்சல் சகாரின் மற்றும் அவருடைய சகோதரர் பிராங்க்ளின் இருவரும் கில்பர்ட் ராஜனை கொடூரமான முறையில் […]
