இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த படகுகளை மீட்டு தரக்கோரி கர்ப்பிணிப் பெண்ணொருவர் முதல்வரிடம் மனு அளித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று நாகை மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி அருகே இருக்கும் கருவேலங்கடை பகுதியில் கல்லாறு வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் அவரை சந்தித்து மனுக்களை அளித்தனர். இதையடுத்து முதல்வர் காரில் புறப்பட்டு சென்ற போது கர்ப்பிணி ஒருவர் முதலமைச்சரை சந்திக்க முயன்றார். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் கர்ப்பிணியை சந்திக்க விடவில்லை. இதையடுத்து […]
