வேலைக்கு சேர்ந்து 3 நாட்களே ஆன கர்ப்பிணி பெண் வெடி விபத்தில் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 15 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த 13 பேரின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவர்களின் உடல்கள் அடையாளம் […]
