மதுரை மாவட்டத்தில் உள்ள அய்யூர் கிராமத்தில் இர்பானா பானு(22) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு பானுவுக்கு சாதிக் அலி(28) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது பானு 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் சாதிக் அலி தனது மனைவியை மருத்துவ பரிசோதனைக்காக அலங்காநல்லூர் அரசு மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். அப்போது வேகத்தடையில் ஏறி இறங்கிய போது எதிர்பாராதவிதமாக பானு நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
