செவிலியர் ஒருவர் கர்ப்பிணி பெண்ணுக்கு செல்போன் டார்ச் மூலம் பிரசவம் பார்த்த சம்பவம் பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலத்திலுள்ள கலபுரகி மாவட்டம் கொல்லூரு கிராமத்தில் வசிப்பவர் சித்தம்மா. இவர், ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சித்தம்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சித்தம்மா உடனடியாக கொல்லூரு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது கொல்லூரு கிராமப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மின்தடை ஏற்பட்டுள்ளது. […]
